Home
News

நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் வோடபோனின் பலே திட்டம்.!

ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து அருமையான திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. அண்மையில் வோடபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு சிறப்பு டேட்டா சலுகைகளை கூட அறிமுகம் செய்தது.

சார்பில் புதிய அறிவிப்பு

தற்சமயம் இந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், வோடபோன் ஐடியா ரூ.99 அன்லிமிடெட் திட்டத்தின் கிடைக்கும் தன்மையை அதிகரித்துள்ளது. அதன்படி இப்போது இந்த திட்டத்தை நாடு முழுவதும் அணுக கிடைக்கும்படி செய்துள்ளது.

கிடைக்கும் இரண்டாவது

எனவே இப்போ வோடபோன ஐடியா நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டத்திற்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இரண்டாவது மலிவான அன்லிமிடெட் திட்டமாக ரூ.99 மாறியுள்ளது.

ஐடியா நிறுவனத்தின் ரூ.99 ப்ரீபெய்ட்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பின்பு 1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி

வோடபோன் ஐடியா ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். முன்னதாக இந்த திட்டம் மேற்கு வங்கம்இ உ.பி. மேற்கு மற்றும் உ.பி. கிழக்கு போன்ற வட்டங்களுக்கு மட்டுமே வழங்கியது. இப்போது ரூ.99 திட்டம் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் Vi Movies மற்றும் TV போன்ற பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்காது.

சற்று விரிவாகப்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.99 திட்டம் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.129 மற்றும் ஏர்டெல் ரூ.129 திட்டத்துடன் போட்டியிடுமா என்பதை நாம் இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

.129 திட்டம் ஆனது 28

ஜியோ நிறுவனத்தின் ரூ.129 திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் இநந்த திட்டம் 2 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது. பின்பு ஜியோவிலிருந்து ஜியோவுக்கு வரம்பற்ற அழைப்பையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 1000 இலவச நிமிடங்களை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 300 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்களுக்கான சந்தா ஆகியவற்றையும் வழங்குகிறது.

ல் நிறுவனத்தின் ரூ.129 திட்டம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.129 திட்டம் ஆனது 24 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, 1ஜிபி அளவிலான மொத்த டேட்டா, 300 எஸ்எம்எஸ்கள், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் இலவச ஹாலோட்யூன்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல் நிறுவனம் மலிவு விலையில் சிறந்தசலுகைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vi’s 99 rupees plan applicable in all circles And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X