Vi சிம் இருக்குல.. 72 நாட்கள் வேலிடிட்டி.. 1 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5ஜி டேட்டா!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களைவிட அதிகப்படியான ப்ரீபெய்ட் திட்டங்களை வோடபோன் ஐடியா (Vi) கொடுக்கிறது. இதில் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது, கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாட்களில் தினசரி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் மலிவான விலைக்கு கொடுத்து உள்ளது. இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
விஐ ரூ 719 திட்ட விவரங்கள் (Vi Rs 719 Plan Details): 2 மாதங்களுக்கு மேல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை மலிவான விலைக்கு பெற வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 72 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த 1 ஜிபிக்கு பிறகு கொடுக்கப்படும். மேலும், 72 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கும். இதில் 5ஜி டேட்டாவை பயன்படுத்த வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் கஸ்டமர்கள் இருக்க வேண்டும். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற சலுகைகளை இதில் எதிர்பார்க்க முடியாது. இந்த சலுகைகளும் வேண்டுமானால், ரூ. 799 திட்டத்துக்கு செல்லலாம்.
இதில் முந்தைய திட்டத்தை விட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல கூடுதலாக தினசரி டேட்டா கிடைக்கும். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற சலுகைகளும் கொடுக்கப்படும். ஓடிடி சலுகைகளை தவிர மற்ற எல்லா சலுகைகளையும் இந்த விஐ ரூ. 799 திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
விஐ ரூ 799 திட்ட விவரங்கள் (Vi Rs 799 Plan Details): முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக 5 நாட்களுக்கு இதில் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, முந்தைய திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் 77 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, 77 நாட்களுக்கு மொத்தமாக 115.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் பயன்படுத்தி கொள்ளும்படி பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகை கிடைக்கிறது.
இந்த டேட்டாவுக்கு கூடுதல் கட்டணங்கள் கிடையாது. அதேபோல தினசரி டேட்டாவிலும் இதில் கழிக்கப்படாது. வீக்கெண்ட் டேட்டா ரோலாவர் (Weekend Data Rollover) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delight) சலுகைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த விஐ ரூ. 799 திட்டம் கஸ்டமர்களுக்கு கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








