வெளுத்து கட்டிய Vi.. 56 நாட்களுக்கு நோ-லிமிட்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா.. ஓடிடி சந்தா!
வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய பிரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், 56 நாட்கள் வேலிடிட்டியில் ஓடிடி அல்லது அன்லிமிடெட் டேட்டா சலுகையை விரும்பும் கஸ்டமர்களுக்கு 2 பக்காவான ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன.
விஐ ரூ.696 திட்ட விவரங்கள் (Vi Rs.696 Plan Details): இந்த திட்டம் ஓடிடி (OTT) பிரியர்கள் மற்றும் அதிக டேட்டா தேவைப்படுபவர்களை குறிவைத்து வழங்கப்படுகிறது. ரூ.696 திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த 56 நாட்களுக்கும் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்யலாம்.

மேலும், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) சலுகையும இதில் சேர்க்கப்பட்டுள்ளது. டேட்டாவைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபிக்கு அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தில் 112 ஜிபி டேட்டா கிடைக்கிறது. விஐ நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில் வசிக்கும் கூடுதல் கட்டணம் இன்றி அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
இந்த ரீசார்ஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதன் மூலம் அமேசான் பிரைமில் உள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பயனர்கள் கண்டு ரசிக்கலாம். இது தவிர, நள்ளிரவு 12 மணி முதல் காலை 12 மணி வரை கட்டணமின்றி அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற பிரத்யேகமாக விஐ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதில் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பக்காவாக இருக்கிறது. ஆனால், 4ஜி டேட்டாவுக்கு 2 ஜிபி என்ற தினசரி லிமிட் இருக்கிறது. இந்த லிமிடெட் இல்லாமல் டேட்டா வேண்டுமானால், அடுத்த திட்டம் பக்காவாக இருக்கும்.
விஐ ரூ.700 திட்ட விவரங்கள் (Vi Rs 700 Plan Details): முதலில் பார்த்த ரூ.696 திட்டத்தை விட வெறும் 4 ரூபாய் மட்டுமே கூடுதலாக கொண்ட இந்த திட்டம், தினசரி டேட்டாவை அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கிறது. அதாவது, இதில் 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் சரி, 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் சரி, தினசரி லிமிட் இல்லாமல் வேலிடிட்டி முழுவதும் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.
இதில் ஓடிடி சந்தா கிடைக்காது. ஆகவே, முழுக்க முழுக்க டேட்டா அன்லிமிடெட் சலுகையில் கிடைக்க வேண்டுமானால், விஐ ரூ.700 திட்டத்துக்கு செல்லலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சந்தா வேண்டுமானால், முதலில் பார்த்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, விஐ கஸ்டமர்கள் இதனடிப்படையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications