என்ன வேணும்னா சொல்லுங்க., இந்த திட்டத்தில் ஏர்டெல், ஜியோவை விட விஐ தான் பெஸ்ட்- பல்வேறு கூடுதல் சலுகைகள்!

|

நாட்டில் இப்போது இணையத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து வளர்ந்து படி படியாக வளர்ந்து முன்னேறி வருகிறது. மக்கள் நல்ல இணைய இணைப்பை விரும்புவது மட்டுமல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அவர்களுக்குப் பயனளிக்கும் சலுகைகளையும் விரும்புகிறார்கள். நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகச் சலுகைகளுடன் கூடிய பல திட்டங்களை வழங்கி வருகின்றன.

வோடபோன் ஐடியா (விஐ) ரீசார்ஜ் திட்டம்

வோடபோன் ஐடியா (விஐ) ரீசார்ஜ் திட்டம்

வோடபோன் ஐடியா (விஐ) இந்தியா முழுவதும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இது 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் ரோல் ஓவர் மற்றும் பிங்கே ஆல் நைட் ஆஃபர் உள்ளிட்ட விஐ ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளை வழங்குகிறது. இதில் பல்வேறு நன்மைகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது ஜியோ, ஏர்டெல் வழங்கும் 84 நாட்கள் திட்டத்தை விட சிறந்ததாக இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல் வழங்கும் திட்டங்கள்

ஜியோ, ஏர்டெல் வழங்கும் திட்டங்கள்

இருப்பினும் ஜியோ, ஏர்டெல் வழங்கும் திட்டங்கள் ஆனது 84 நாட்கள் செல்லுபடி காலத்தை வழங்குகிறது. அதேபோல் விஐ நிறுவனம் வழங்கும் ரூ.599 திட்டமானது 70 நாட்கள் வேலிடிட்டி காலத்தை மட்டுமே வழங்குகிறது. 84 வேலிடிட்டிக்கு கூடுதல 14 நாட்கள் செல்லுபடி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகும். தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ ரூ.666 என்ற விலையிலும் ஏர்டெல் ரூ.719 என்ற விலையிலும் வழங்குகிறது. அதே சமயத்தில் விஐ வழங்கும் ரூ.599 திட்டமானது 70 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வழங்குகிறது.

விஐ ரூ.599 திட்டம்

விஐ ரூ.599 திட்டம்

விஐ நிறுவனம் ரூ.599 திட்டத்தை 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த திட்டமானது விஐ மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் இன் ஓவர் தி டாப் (ஓடிடி) நன்மைகளை வழங்குகிறது. ஓடிடி ஸ்ட்ரீமிங் பயன்படுத்தும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். விஐ நிறுவனத்தின் ரூ.599 திட்டமானது பயனர் மொபைல் சேவைக்கு என நாள் ஒன்றுக்கு ரூ.8.56 செலவழிக்க வேண்டும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகளுடன் வருவதால் இந்த திட்டம் பணத்திற்கு மதிப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் விஐ 4ஜி சேவை பல இடங்களில் சிக்கலை சந்திக்கிறது என்பதால் பலர் ஜியோ, ஏர்டெல் 4ஜி திட்டத்திற்கே மதிப்பளிக்கின்றனர் என கூறப்படுகிறது.

ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

Vi ஆனது மொத்தம் ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ. 699 விலையில் இரண்டு உறுப்பினர்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. முதன்மை இணைப்புகள் மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு 40 ஜிபி டேட்டா உடன் மொத்தம் 80 ஜிபி டேட்டாவை இந்தத் திட்டம் வழங்குகிறது. பயனர்கள் மாதம் 3000 எஸ்எம்எஸ் உடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் பெறுகிறார்கள். வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் குரல் அழைப்புகளுடன், இந்த திட்டத்துடன் வரும் கூடுதல் நன்மை Vi Movies மற்றும் TV -க்கான அணுகல் மட்டுமே.

போஸ்ட்பெய்ட் திட்டம் விவரங்கள்

போஸ்ட்பெய்ட் திட்டம் விவரங்கள்

Vi வழங்கும் அடுத்த போஸ்ட்பெய்ட் திட்டம் என்று பார்க்கையில் இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ. 999 என்ற விலையில் வருகிறது. ரூ. 999 என்ற விலைக்கு, Vi ஆனது 3 குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்லுபடியாகும் இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் மாதம் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையுடன் மொத்தம் 220 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் முதன்மை இணைப்பு மொத்தம் 140 ஜிபி பெறுகிறது. மற்ற இரண்டு இரண்டாம் இணைப்புகள் 40 ஜிபி டேட்டாவைப் பெறுகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதேபோல் விஐ நிறுவனம் ரூ.1299 போஸ்ட்பெய்ட் திட்டம், ரூ.1699 போஸ்ட்பெய்ட் திட்டம், ரூ.2299 போஸ்ட்பெய்ட் திட்டங்களை தொகுத்து வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
VI Rs.599 Plan Offers Best Deals than Jio, Airtel Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X