Home
News

இதுபோதுமே ரீசார்ஜ் பிச்சிக்க.. Vi சிம் இருந்த 56 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

வோடபோன் ஐடியா (Vi) கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், பின்ஞ் ஆல் நைட் டேட்டா போன்ற சலுகைகள் கிடைத்துவந்த மலிவு விலை திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சேர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்பட்ட இந்த சலுகை இப்போதும் கிடைக்கிறது. இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விஐ ரூ 579 திட்ட விவரங்கள் (Vi Rs 579 Plan Details): இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 1.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. இதுபோக ஏகப்பட்ட டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன.

இதுபோதுமே ரீசார்ஜ் பிச்சிக்க.. Vi சிம் இருந்த 56 நாட்களுக்கு வாய்ஸ்!

அதாவது, தினசரி டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மேலும், பின்ஞ் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா உங்களது தினசரி டேட்டாவில் (Daily Data) இருந்து குறைக்கப்படாது.

இந்த டேட்டா சலுகை போக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது, தினசரிக்கு ஒதுக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டாவில் மீதம் இருக்கும் டேட்டாவை வாரம் முழுவதும் சேமித்து வைத்து, அதை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படுகிறது.

மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delight) சலுகை மூலமாக மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இது உங்களிடம் டேட்டாவே இல்லையென்றால், ரீசார்ஜ் செய்வது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். விஐ ஆப் மூலம் இதை கிளைம் செய்து கொள்ளலாம். இப்படி டேட்டாவில் மட்டும் பல்வேறு சலுகைகளை கொடுக்கிறது. இப்போது, மற்ற சலுகைகளுக்கு வருவோம்.

இந்த விஐ திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுவந்தன. இப்போது, தீபாவளிக்கு ஓடிடி சந்தா சேர்க்கப்பட்டது. இந்த சலுகை இப்போதும் கிடைக்கிறது.

ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த ஓடிடி சந்தா ஒரு மாதத்துக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், முன்கூட்டியே ஓடிடி முடியும்.

56 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல சலுகைகள் 84 நாட்களுக்கு வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படும். டேட்டா சலுகைகள் கூடுதலாக கிடைக்கிறது. இதை பார்ப்போம்.

விஐ ரூ 859 திட்ட விவரங்கள் (Vi Rs 859 Plan Details): முந்தைய திட்டத்தில் பார்த்த மொத்த சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. வேலிடிட்டி மட்டும் 56 நாட்களுக்கு பதிலாக 84 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கிறது. கூடுதல் டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 579 Plan With 56 Days Validity Unlimited Voice Calls JioHotstar Mobile Check Diwali Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X