பலே ஜோர்.. Vi அறிமுகம் செய்த ரூ.49 திட்டம்.. முன்பை விட இப்போ இன்னும் அதிக டேட்டா.. IPL பார்க்க பெஸ்ட்..
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை தொடர்ந்து, இப்போது வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) என்று அழைக்கப்படும் டெலிகாம் நிறுவனம், இப்போது ரூ. 49 திட்டத்தில் புதிய மாற்றங்களை மேம்படுத்தி கூடுதல் நன்மையை வழங்கியுள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஎல் 2024 (IPL 2024) ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் 49 ரூபாய்க்கு ஒரு டேட்டா திட்டத்தை (data plan) அறிமுகம் செய்தது. அதேபோல், ஜியோவுக்கு போட்டியாக, நாங்களும் ஒன்றும் சும்மா இல்லை, எங்களுக்கும் 49 ரூபாய்க்கு நன்மைகளை வழங்க முடியுமென்று ஏர்டெல் நிறுவனம் 49 ரூபாயில் ஒரு புதிய டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்தது.

விஐ ரூ.49 டேட்டா திட்டம் (Vi Rs 49 Data Plan):
இந்த வரிசையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் கூட அதன் அப்பட்டியலில் கீழ் ரூ. 49 விலையில் ஒரு டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், அதன் நன்மைகள் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கிய 49 ரூபாய் திட்டத்துடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த அளவிலான டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணர்ந்த Vi நிறுவனம் இப்போது அதன் ரூ. 49 திட்டத்தின் நன்மைகளில் சில மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) என்று அழைக்கப்படும் டெலிகாம் நிறுவனம் இப்போது அதன் 49 ரூபாய் டேட்டா திட்டத்தில் (Vi Rs 49 Data Plan) சில மாற்றங்களை மேற்கொண்டு சில புதுமைகளை அமல்படுத்தியுள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் விஐ இன் ரூ. 49 டேட்டா திட்டம் இப்போது மொத்தமாக 20GB டேட்டா (20GB data) நன்மையை அதன் பயனருக்கு வழங்குகிறது.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் வெறும் 1 நாள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. இந்த 20ஜிபி டேட்டா நன்மை முற்றிலும் ஹை-ஸ்பீட் டேட்டாவாக வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தெரியாதவர்களுக்கு, வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) வழங்கிய பழைய ரூ.49 டேட்டா பிளான் திட்டம் அதன் பயனருக்கு வெறும் 6GB டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பேலன்ஸ் டேட்டா நன்மை என்னவாகும்?
இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாத பேலன்ஸ் டேட்டா நன்மை அடுத்த நாளுக்கு எடுத்து செல்லப்படமாட்டாது என்று தெளிவாக Vi உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விஐ ரூ.49 திட்டத்தின் 1 நாள் வேலிடிட்டி உடன் பேலன்ஸ் டேட்டா இருப்பும் காலாவதியாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தெரியாதவர்களுக்கு, வாடிக்கையாளர் நள்ளிரவு 12:00 மணிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ரீசார்ஜ் செய்தாலும், 1 நாள் வேலிடிட்டி நள்ளிரவில் முடிவடைந்துவிடும்.
20ஜிபி அதிவேக டேட்டாவைத் தவிர, இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட வேறு எந்தப் நன்மைகளையும் இந்த ரூ.49 திட்டம் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் ரூ.49 திட்டத்தை செயல்படுத்த, செயலில் உள்ள அடிப்படைத் திட்டம் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். IPL ரசிகர்களுக்கு வெறும் ரூ.49 கிடைக்கும் இந்த திட்டம் சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications