Home
News

Vi சிம் கார்டுக்கு அடிச்ச யோகம்.. 4G போன் போதும்.. நாள் முழுக்க அன்லிமிடெட் டேட்டா.. ரூ.499-க்கு முடிந்தது!

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) நாள் முழுக்க அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கிறது. மற்ற நிறுவனங்கள் 5ஜி திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கின்றன. ஆனால், வோடபோன் ஐடியா 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும் தினசரி லிமிட் இல்லாமல், நாள் முழுக்க அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா போன்ற சலுகைகளை கொடுக்கிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை இலவசமாக கொடுக்கின்றன. ஆனால், அந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் 4ஜி டேட்டாவுக்கு 1.5 ஜிபி, 2 ஜிபி, 2.5 ஜிபி போன்ற தினசரி லிமிட் விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் 4ஜி வேகத்திலேயே அன்லிமிடெட் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது.

Vi சிம் கார்டுக்கு அடிச்ச யோகம்! 4G போன் போதும்.. நாள் முழுக்க டேட்டா!

விஐ ரூ 449 திட்ட விவரங்கள் (Vi Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நாள் முழுக்க அன்லிமிடெட் டேட்டா கிடைப்பதால், தினசரி லிமிட் இதற்கு கிடையாது. அதேபோல போஸ்ட் டேட்டா சலுகையும் தேவையில்லை.

இந்த டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை 28 நாட்கள் முழுவதும் எந்த லிமிட்டும் இல்லாமல், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ் சலுகை வழக்கம் போல 100 கணக்கில் கிடைக்கிறது.

இந்த அன்லிமிடெட் டேட்டாவுக்கு ஏற்ப ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை (JioHotstar Mobile Subscription) 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக விஐஎம்டிவி சந்தா (ViMTV Subscription) கிடைக்கிறது. ஆகவே, விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV App) ஆப் மூலமாக 19 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஒரே ஆப் மூலமாக சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஃபேன்கோட் (FanCode) போன்ற 19 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஒருவேளை தினசரி டேட்டா மட்டும் போதும் என்றால், மற்றொரு வோடபோன் ஐடியா திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பார்ப்போம்.

விஐ ரூ 399 திட்ட விவரங்கள் (Vi Rs 399 Plan Details): இந்த திட்டத்துக்கும் அதே 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்காது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 56 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேடடா கொடுக்கப்படும். இதுபோக விஐ டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன.

ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 12 மணி நேரங்களுக்கு தினசரி டேட்டா கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல், இந்த டேட்டா சலுகை கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.

மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் விஐஎம்டிவி சந்தா சந்தா மட்டும் கிடைக்கவில்லை. மற்ற சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 449 Plan With Unlimited Voice Calls 28 Days Validity Check Full Day Unlimited Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X