Home
News

OTT நன்மையோடு இப்படி ஒரு Vi ரீசார்ஜ் திட்டமா.! கம்மி விலையில் இவ்வளவு இலவச நன்மைகளா?

வோடபோன் ஐடியா (Vi), இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக செயல்பட்டு வருகிறது. ஜியோ, ஏர்டெல் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக தலை சிறந்த டெலிகாம் ஆபரேட்டர் பின்னால் செல்லும் போது, Vi இடம் இருந்து கிடைக்கும் சில மகத்தான விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், Jio மற்றும் Airtel நிறுவனத்தை விட Vi சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

இந்தியாவில் Vi மட்டுமே இந்த நன்மைகளை வழங்குகிறதா?

இந்தியாவில் Vi மட்டுமே இந்த நன்மைகளை வழங்குகிறதா?

குறிப்பாக, வேறு எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்காத சில சூப்பர் நன்மைகளை இந்தியாவில் Vi மட்டுமே வழங்குகிறது. இதுவே உண்மை. Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights போன்ற நன்மைகளைத் தலை சிறந்த நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கூட வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உண்மையைச் சொன்னால், இந்த நன்மைகளின் மூலம் உங்களுக்குத் தாராளமான டேட்டா இலவசமாகக் கிடைக்கிறது.

கம்மி விலையில் OTT நன்மையுடன் இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டமா?

கம்மி விலையில் OTT நன்மையுடன் இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டமா?

சரி, இப்போது Vi வழங்கும் ஒரு பெஸ்டான பாக்கெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். கம்மி விலையில் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் கூடிய ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக Vi இன் ரூ.3999 திட்டத்தைத் தான் வாங்க வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டம் OTT பிரியர்களுக்கு ஏற்றது, குறிப்பாக அதிகச் செலவு இல்லாத பட்ஜெட் பிரெண்ட்லி திட்டமாகும்.

ரூ.399 விலையில் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா?

ரூ.399 விலையில் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா?

ரூ.399 விலையில், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா என்று பல நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் பார்க்க விரும்பும் குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சி அல்லது விளையாட்டுப் போட்டிகளை வெறும் ரூ.399 விலையில் நீங்கள் ரசித்திட முடியும். சரி, Vodafone Idea-வின் இந்த ரீசார்ஜ் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று தெளிவாகப் பார்க்கலாம். இந்த திட்டத்துடன் மற்றொரு பெஸ்டான திட்டத்தையும் சேர்த்துள்ளோம்.

வோடபோன் ஐடியா ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS என்று 28 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இதில் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, Vi Movies & TV VIP போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. Vi Hero அன்லிமிடெட் நன்மைகளில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights போன்றவை அடங்கும்.

ரூ.100 கூடுதலாக செலுத்தினால் ஒரு வருட OTT சந்தாவா?

ரூ.100 கூடுதலாக செலுத்தினால் ஒரு வருட OTT சந்தாவா?

இந்த திட்டத்தில் வழங்கப்படும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் OTT தளத்தில் மூன்று மாதங்களுக்குப் பார்க்கலாம். ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய Vi இன் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் விரும்பினால், Vi இன் ரூ.499 திட்டத்திற்குச் செல்லலாம். இந்தத் திட்டமானது ரூ. 399 திட்டத்தை விட ரூ.100 மட்டுமே அதிகம். ஆனால், அதே நன்மைகளுடன் வருகிறது, டேட்டா மட்டும் தினசரி 2ஜிபி ஆகும்.

இரவு முழுக்க இலவச டேட்டா வேண்டுமா?

இரவு முழுக்க இலவச டேட்டா வேண்டுமா?

'Binge All Night' என்ற அல்டிமேட் நன்மையை Vi மட்டுமே வழங்குகிறது. அதாவது, இந்த சேவையின் மூலம் நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் டேட்டாவை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், வீக்கெண்டு டேட்டா ரோல் ஓவர் என்ற நன்மையின் மூலம் உங்கள் தினசரி டேட்டா கணக்கில் எஞ்சியுள்ள ஒட்டுமொத்த டேட்டாவையும் நீங்கள் வார இறுதியில் மொத்தமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நன்மையை எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vi Rs 399 Pocket Friendly Plan Provides OTT Subscription With Vi Hero Unlimited Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X