24 மணி நேர ப்ரீ டேட்டா.. வோடபோன் இறக்கிய ரூ.349 திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. எந்தெந்த சர்க்கிள்கள்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் 24 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கும் விஐ நான்-ஸ்டாப் ஹீரோ (Vi Non-Stop Hero) திட்டங்களை குறிப்பிட்ட சர்க்கிள்களில் களமிறக்கி வருகிறது. இப்போது, புதிதாக மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களின் சலுகைகள் எப்படி? எந்தெந்த சர்க்கிள்களில் கிடைக்கிறது? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 349 Prepaid Plan): இந்த புதிய திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் 24 மணி நேர அன்லிமிடெட் டேட்டாவை (24 Hours Unlimited Data) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.

மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த சலுகைகளுக்கு மிகவும் மலிவாக விலை இருப்பதால், இதை ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் திட்டமாக (First Recharge Plan) வோடபோன் ஐடியா வைத்திருக்கிறது. ஆகவே, வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு மாறும் புதிய கஸ்டமர்கள் மட்டுமே அவர்களுக்கான முதலாவது திட்டமாக இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 649 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 649 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. இதற்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த நாட்களில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.
இதுபோக விஐ கேரண்டி (Vi Guarantee) சலுகையாக 130 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கிறது. இதற்கு அடுத்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமும் அனைத்து வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 949 Prepaid Plan): மூன்று மாதங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகையை விரும்பும் கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 130 ஜிபி கூடுதல் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது.
முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை இந்த 24 மணி நேர டேட்டா திட்டமும் கொடுக்கிறது. இந்த மூன்று திட்டங்கள் ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய டெலிகாம் சர்க்கிள்களில் மட்டுமே கிடைக்கின்றன. மற்ற சர்க்கிள்களில் கூடிய விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதேபோல ஏற்கனவே 24 மணி நேரமும் டேட்டா சலுகை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் வெளியாகின. இதில் ஓடிடி சலுகைகளும் கொடுக்கப்பட்டன. அதில் 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வேலிடிட்டி வரையில் 13 திட்டங்கள் வந்தன. ரூ.365 முதல் ரூ.998 வரையில் கட்டணங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களிலும் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த திட்டங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், டேட்டா அல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அடங்கிய திட்டங்கள் இங்கு கிடைக்கின்றன. ஆகவே, டேட்டாவுக்கும் இதுபோன்ற அன்லிமிடெட் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டெலிகாம் கஸ்டமர்களிடையே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








