Home
News

Vi சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 180 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. அன்லிமிடெட் 4ஜி 5ஜி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 4ஜி டேட்டாவை பொறுத்தவரை பெரும்பாலான திட்டங்களில் தினசரி டேட்டா வரம்பு இருக்கிறது. இருப்பினும், வோடபோன் ஐடியாவானது (Vodafone Idea) தனது கஸ்டமர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி என இரண்டிலுமே அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தும் வகையில் ஒரு நீண்ட கால திட்டத்தை வழங்குகிறது.

குறிப்பாக, வோடபோன் ஐடியாவின் ரூ.2180 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, ஒருமுறை இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் சுமார் 6 மாதங்களுக்கு தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டத்தின் மொத்த விலையை 6 மாதங்களுக்கு பிரித்து பார்த்தால், மாதத்துக்கு சுமார் ரூ.363 மட்டுமே செலவாகிறது.

Vi சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 180 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த ரூ.2180 திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே அன்லிமிடெட் டேட்டா சலுகையாகும். பொதுவாக 4ஜி டேட்டா திட்டங்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி என ஒரு குறிப்பிட்ட டேட்டா வரம்பு வழங்கப்படும். அந்த தினசரி டேட்டா முடிந்த பிறகு இன்டர்நெட் வேகம் 64 கேபிபிஎஸ் அளவுக்கு குறைக்கப்படும். ஆனால், இந்த ரூ.2180 திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு வழங்கப்படவில்லை.

இதனால், 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் 180 நாட்கள் வேலிடிட்டி காலத்திலும் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதேபோல், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வோடபோன் ஐடியாவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்த முடியும்.

இருப்பினும், வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவை தற்போது குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே 5ஜி சேவை கிடைக்கும்ஸ பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் கஸ்டமர்கள் இந்த திட்டத்தின் வழியாக அன்லிமிடெட் 5ஜி சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். ரீசார்ஜ் செய்வதற்கு முன்பாகவே 5ஜி சேவை உங்களது பகுதியில் கிடைக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

டேட்டா மட்டுமின்றி, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் என அனைத்து வகையான வாய்ஸ் கால்களையும் அன்லிமிடெட் முறையில் மேற்கொள்ள முடியும். மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல, 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு வோடபோன் ஐடியா திட்டமும் உள்ளது. இதன் விலை ரூ.1749 ஆகும். இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஆனால், 4ஜி டேட்டாவை பொறுத்தவரை தினசரி 1.5 ஜிபி என்ற வரம்பு வழங்கப்படுகிறது.

ரூ.1749 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் நைட் டேட்டா உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், தினசரி 4ஜி டேட்டா வரம்பு இல்லாமல் பயன்படுத்த விரும்பும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு ரூ.2180 திட்டம் வேறுபட்ட சலுகையை வழங்குகிறது.

எனவே, 6 மாதங்களுக்கு ஒரே ரீசார்ஜ் மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகளை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த நீண்ட கால திட்டம் கவனம் பெறுகிறது. குறிப்பாக, தினசரி டேட்டா லிமிட் இல்லாமல் 4ஜி டேட்டாவை பயன்படுத்த விரும்புபவர்கள் இந்த ரூ.2180 ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை கவனிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vi Rs 2180 Plan With Unlimited Voice Calls Unlimited 4G And 5G Data Check 6 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X