Home
News

ஒரே Vi ரீசார்ஜ்.. மாதம் ரூ.167-க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 24ஜிபி டேட்டா.. 3600 எஸ்எம்எஸ்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுக்கு துளியும் குறையில்லாதபடி விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆனது வருடாந்திர திட்டங்களை மலிவான விலைக்கு கொடுக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.167 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த விஐ வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டங்கள் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களைவிட வோடபோன் ஐடியாவில் அதிகமாக இருக்கின்றன. 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கூடுலாக கிடைக்கின்றன. இதில் விஐ ரூ.1999 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியில் பக்கா சலுகைகளை கொடுக்கிறது.

ஒரே Vi ரீசார்ஜ்.. மாதம் ரூ.167-க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மாதத்துக்கு ரூ.167 மட்டுமே தேவைப்படுகிறது. இதில் வாய்ஸ் கால்களுடன் (Voice Calls) டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை லம்ப்சம் சலுகையில் கொடுக்கிறது. ஆகவே, இதை வாய்ஸ் ஒன்லி திட்டமாக (Voice Only Plan) பார்க்க முடியாது. முதலில் வாய்ஸ் கால்கள் சலுகையில் இருந்து தொடங்கலாம்.

விஐ ரூ 1999 திட்ட விவரங்கள் (Vi Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. இந்த சிம் ஆக்டிவ் கிடைத்தாலே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாய்ஸ் கால்கள் மட்டுமே அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கும். மற்ற சலுகைகள் லம்ப்-சம் முறையில் மட்டுமே கொடுக்கப்படும். அதாவது, 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது. 24 ஜிபி மட்டும்தான் கிடைக்கும்.

கூடுதல் டேட்டா வேண்டுமானால், விஐ கஸ்டமர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு செல்லலாம். இந்த லம்ப்சம் டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்சம் சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, 3600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இதையும் 365 நாட்கள் முழுவதும் தேவைப்படும்போது எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம்.

ஒரு நாளுக்கு இத்தனை எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற கணக்கு கிடையாது. ஆகவே, வாய்ஸ் கால்கள் போதுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை தினசரி டேட்டாவுடன் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

விஐ ரூ 1749 திட்ட விவரங்கள் (Vi Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 180 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட பாதி வேலிடிட்டியாக இருக்கலாம். ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல 1.5 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா உள்ளது.

இதுபோக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, 1.5 ஜிபி டேட்டா அல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். டேட்டா டிலைட்ஸ் மூலம் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 1999 Plan With 365 Days Validity Unlimited Voice Calls 24GB Data At Rs 167 Monthly Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X