Home
News

Jio, Airtel-க்கு இல்ல.. ரூ.10 கம்மி.. இனி ரூ.179 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1ஜிபி டேட்டா.. Vi-க்கு மட்டும்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் மலிவு விலை திட்டமாக ரூ.189 விலை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இருக்கிறது. ஆனால், அதைவிட ரூ.10 கம்மியான விலைக்கு விஐ (Vi) நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொடுக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தினசரி டேட்டா இல்லாமல், மொத்தமாக 1 ஜிபி டேட்டா மட்டுமே கொடுத்து, கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டங்கள் மட்டுமே மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் ஆரம்ப விலை திட்டங்களாகவும் இருக்கின்றன. ஏர்டெல்லில் ரூ.189 திட்டமானது, ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதில் 21 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

Jio, Airtel-க்கு இல்ல.. ரூ.10 கம்மி.. இனி ரூ.179 போதும்.. அன்லிமிடெட்!

1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல ஜியோ நிறுவனத்தில் ரூ.189 திட்டமானது, ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. ஆனால், இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல டேட்டாவும் 2 ஜிபியாக கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மதிரியாகவே இருக்கின்றன.

எப்படி பார்த்தாலும், ரூ.189 கையில் இருந்தால் மட்டுமே வாய்ஸ் கால்களுடன் மலிவான திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும் என்பது தெரிகிறது. ஆனால், விஐ நிறுவனத்தில் அப்படியில்லை, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் கால்களுடன் திட்டத்தை வைத்திருக்கிறது. ரூ.10 விலை கம்மியாக ரூ.179 விலைக்கு திட்டத்தை பெற்று கொள்ளலாம்.

விஐ ரூ 179 திட்ட விவரங்கள் (Vi Rs 179 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இது ஜியோவை விட குறைவாக இருக்கிறது. ஆனால், அதைவிட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய முடிகிறது. அதேபோல ஏர்டெல்லைவிட அதிக வேலிடிட்டி கொடுக்கிறது. அதில் 21 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது.

இதில் 24 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல மொத்தமாக 1 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முழுவதுக்கும் கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ்களை இந்த வேலிடிட்டி நாட்களில் செய்து கொள்ளலாம்.

இதில் கிடைக்கும் 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, கூடுதல் கட்டணம் இருக்கும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே போதும் என்றால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு விஐ நிறுவனத்தில் மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஆனால், அதில் 20 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைப்பதால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் ஒப்பிடவில்லை. இந்த திட்டம் மட்டுமே விஐ நிறுவனத்தில் வாய்ஸ் கால்களுடன் கிடைக்கும் ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதன் விலை ரூ.155ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலையிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது.

விஐ ரூ 155 திட்ட விவரங்கள் (Vi Rs 155 Plan Details): இந்த மலிவு விலை திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் மொத்தமாக 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையும் இருக்கிறது. இதிலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 179 Plan With Unlimited Voice Calls 1GB Data 300 SMS 24 Days Validity Check Pack Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X