Home
News

Vi சிம் இருக்கா? ரூ.200-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா.. 300 எஸ்எம்எஸ்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரூ.200 விலைக்கும் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் (Unlimited Voice Calls) ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், கண்ணை மூடிக் கொண்டு இந்த மூன்று திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த திட்டங்களில் தினசரி டேட்டா கிடைக்காது. அதேபோல தினசரி எஸ்எம்எஸ்களும் கிடைக்காது. ஏனென்றால், அவ்வளவு மலிவான விலைக்கு இந்த திட்டங்கள் கிடைக்கிறது.

விஐ ரூ.179 திட்ட விவரங்கள் (Vi Rs 179 Plan Details): இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படும். போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது. ஏனென்றால், தினசரி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கவில்லை.

Vi சிம் இருக்கா? ரூ.200-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1GB டேட்டா!

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். வேலிடிட்டி முழுவதுக்கும் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோக விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா கிடைக்கும்.

விஐ ரூ.189 திட்ட விவரங்கள் (Vi Rs 189 Plan Details): முன்னதாக பார்த்த திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 26 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா கொடுக்கப்படாது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

அதாவது, அதே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுபோக 1 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவும் தினசரிக்கு கிடைக்காது. ஆகவே, இந்த 1 ஜிபி டேட்டா முடிந்த பிறகு போஸ்ட் டேட்டாவை பயன்படுத்த முடியாது.

விஐ ரூ.199 திட்ட விவரங்கள் (Vi Rs 199 Plan Details): இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டங்களில் கிடைத்ததைவிட கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல டேட்டாவும் கூடுதலாக கிடைக்கும். விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால், இதிலும் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது. 300 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுக்கிறது. ரூ.200 விலைக்குள் வாய்ஸ் கால்களுடன் திட்டம் வேண்டுமானால், இந்த மூன்று ரீசார்ஜ் ஆப்ஷன்களை எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vi Rs 179 Plan And Rs 189 Plan With Unlimited Voice Calls 1GB Data Check Under Rs 200 Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X