Home
News

Jio, BSNL, Airtel-ஐ ஓடவிட்ட Vi.. 180 நாளுக்கு ஒரே பிளான்.. அளவில்லாத டேட்டா.. மொத்த இந்தியாவும் ரொம்ப ஹேப்பி..

ஜியோ (Jio), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஏர்டெல் (Airtel) போன்ற இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் (Indian telecom customers) அனைவரும் பார்த்து வியக்கும் வகையிலான ஒரு புதிய 180 நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (180 days plan) தற்போது வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத நன்மைகளை இந்த புதிய விஐ (Vi) திட்டம் தற்போது வழங்கியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) வழங்கிய உத்தரவின் படி, ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (voice and SMS only plans) அறிமுகம் செய்து வரும் வேளையில், வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பட்டியலில் கூடுதலாக ஒரு புதிய திட்டத்தை சேர்த்துள்ளது. இந்த திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Vi 180 day plan) உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio, BSNL, Airtel-ஐ ஓடவிட்ட Vi.. 180 நாளுக்கு ஒரே பிளான்..

Jio, BSNL, Airtel-ஐ ஓடவிட்ட Vi.. 180 நாளுக்கு ஒரே பிளான்.. அளவில்லாத டேட்டா:

விஐ இன் இந்த புதிய 180 நாட்கள் வேலிடிட்டி திட்டம் முழுமையாக உங்களுக்கு 6 மாதத்திற்கான நன்மைகள் மிகவும் குறைந்த விலையில் (6 months plan) வழங்குகிறது. வோடபோன் ஐடியா வழங்கியுள்ள புதிய திட்டம் விஐ ரூ. 1749 திட்டம் (Vi Rs 1749 Plan) என்ற பெயருடன் அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வோடபோன் ஐடியா திட்டம் 6 மாத நீண்ட காலத்திற்கு என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

விஐ 1749 பிளான் (Vi 1749 Plan), அதன் வாடிக்கையாளர்களுக்கு 180 நாட்களுக்கு முழுமையாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இத்துடன் இது அணைத்து நெட்வொர்க் லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் சேவையை (national roaming service) வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது.

விஐ ரூ. 1749 திட்டம் (Vi Rs 1749 Plan):

இந்த புதிய விஐ ரூ 1749 திட்டம் தினசரி 1.5GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை (high speed data) வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 270GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் சில கூடுதல் இலவச நன்மைகளை வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்டு சொல்லும் படியாக, இந்த திட்டத்தின் அன்லிமிடெட் டேட்டா (unlimited data) நன்மை மற்றும் டேட்டா வீகென்ட் ரோல் ஓவர் (data weekend rollover) நன்மை பார்க்கப்படுகிறது.

ஆம், இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் திகட்ட திகட்ட அன்லிமிடெட் டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் 180 நாட்களுக்கு தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தினசரி கிடைக்கும் 1.5GB டேட்டா நன்மையில் நீங்கள் தினசரி பயன்படுத்தாத டேட்டாவை மொத்தமாக சேர்த்து வார இறுதியில் பயன்படுத்திக்கொள்ள வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை அனுமதிக்கிறது.

இதுவரை இத்தகைய நன்மையை ஜியோ (Jio), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஏர்டெல் (Airtel) என்று எந்தவொரு நெட்வொர்க்கும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. டேட்டா தேவை அதிகமாக தேவைப்படும் இந்திய மக்களுக்கு இதை விட ஒரு ஆகச்சிறந்த திட்டம் கிடைக் வாய்ப்பே இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 1749 Plan For 180 Days With 1.5GB Daily Data Unlimited Midnight Data and Weekend Data Rollover Benefit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X