Vi சிம் இருக்கா.. இதை உடனே பண்ணிடுங்க.. 180 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் மலிவான விலைக்கு கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால், இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடையாது. ஆனால், விஐ (Vi) நிறுவனத்தில் கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் பக்காவாக உள்ளது.

விஐ ரூ. 1749 திட்ட விவரங்கள் (Vi Rs 1749 Plan Details): 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மேலும், 1.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தினசரி டேட்டா போக கூடுதலாக பல்வேறு டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, 4ஜி வேகத்தில் இந்த 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 180 நாட்களுக்கு 270 ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதை 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
இந்த 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் நைட் டேட்டா (Ulimited Night Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை நள்ளிரவு 12 மணி முதல் பயன்படுத்தி கொள்ளலாம். காலை 6 மணி வரையில் பயன்படுத்த கிடைக்கும். இந்த டேட்டா முற்றிலும் இலவமாக கொடுக்கப்படுகிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தினசரிக்கு கொடுக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டாவில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை திங்கள் முதல் வெள்ளி வரையில் சேமித்து வைத்து, சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு பிறகும் டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கும். அதாவது மாதத்துக்கு 2 ஜிபி பேக்கப் டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
எந்த டேட்டா சலுகையும் இல்லாத நேரத்தில் இந்த டேட்டாவை விஐ ஆப் வழியாக கிளைம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட சலுகைகளை 180 நாட்களுக்கு இந்த திட்டம் கொடுக்கிறது. இதேபோல வருடம் முழுவதும் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், விஐ ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம்.
விஐ ரூ. 3,499 திட்ட விவரங்கள் (Vi Rs 3,499 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த ஒட்டுமொத்த சலுகைகளும் இந்த திட்டத்திலும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி மட்டும் 365 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகைகள் கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.
மேலும், டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் கிடைக்கின்றன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டிக்கு ஏற்ப வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








