ரூ.148, ரூ.149 விலையில் இவ்வளவு சலுகையா?- Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
விஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதில் ரூ.148, ரூ.149 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நிர்ணய விலையைவிட அதிகமான சலுகைகளை விஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

வோடபோன் ஐடியா பல்வேறு திட்டங்கள்
வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில் வோடபோன் ஐடியா தங்களது பிராண்டை விஐ என அறிவித்தது. விஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் தக்கவைக்கவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

டபுள் டேட்டா உள்ளிட்ட சலுகை
விஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா நன்மை, வீக் எண்ட் ரோல் ஓவர் டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைககளை வழங்குகிறது. இதில் வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
விஐ ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் நிர்ணய விலையை விட அதிக சலுகைகளை வழங்குகிறது. மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் சிறந்த தேர்வாகும்.

28 நாட்கள் வேலிடிட்டி
ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதோடு பிற அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

விஐ மூவி, டிவி ஆப் சந்தா அணுகல்
மேலும் இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 300 எஸ்எம்எஸ்கள் இலவசமாக கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் விஐ மூவி, டிவி ஆப் சந்தா அணுகலை இலவசமாக வழங்குகிறது.

ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டமானது அதிக நாட்களுக்கு பதிலாக அதிக டேட்டா வழங்கவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ரூ.148 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 18 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மொத்தம் 18 ஜிபி டேட்டா
இந்த திட்டத்தில் வேலிடிட்டி முடியும்வரை வரம்பற்ற குரலழைப்பு வசதியை வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி என மொத்தம் 18 ஜிபி டேட்டா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications