ஒரே Vi ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.1,149 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 15GB டேட்டா!
விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 6 மாதங்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்துள்ளது. இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பார்க்க முடியாது. ஆனால், வோடபோன் ஐடியாவில் இருக்கின்றன. இதில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக வோடபோன் ஐடியா ரூ. 1149 திட்டம் இருக்கிறது. இதில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு மாதத்துக்கு ரூ.191 செலவில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

விஐ ரூ. 1149 திட்ட விவரங்கள் (Vi Rs 1149 Plan Details): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் எஸ்எம்எஸ் மற்றும் லம்ப்-சம் டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கிடைக்கும்.
15 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இது லம்ப்-சம் சலுகையாக இருப்பதால், தினசரி லிமிட் கிடையாது. அதேபோல போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படாது. ஆகவே, 15 ஜிபிக்கு பிறகு பயன்படுத்தும் டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 1 எம்பி டேட்டாவுக்கு 50 பைசா செலுத்த வேண்டும்.
கூடுதல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் கிடைக்கிறது. 180 நாட்களுக்கும் சேர்ந்து 1800 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். இதை தேவைக்கு ஏற்ப கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த லிமிட்டுக்கு மேல் கட்டணம் இருக்கும்.
மலிவான விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த வோடபோன் ஐடியா திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒருவேளை இதே 180 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை வேண்டுமானால், விஐ ரூ. 1749 திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
விஐ ரூ. 1749 திட்ட விவரங்கள் (Vi Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 180 நாட்கள் வேலிடிட்டி கிடைத்துள்ளது. ஆனால், இதில் லம்ப்-சம் டேட்டாவுக்கு பதிலாக தினசரி டேட்டா சலுகை கிடைக்கும். ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 270 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பின்ஞ் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delight) சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.
இதில் நைட் டேட்டா வழியாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








