Home
News

Jio இல்லையா.. மாதாந்திரம் ரூ.175-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி.. இறக்கிய Vi.. 12 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இதைவிட மலிவான விலைக்கு எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.175 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 12 ஜிபி டேட்டா மற்றும் 1800 எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், 180 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு விஐ ப்ரீபெய்ட் திட்டம் (Vi Prepaid Plan) களமிறக்கப்பட்டு இருக்கிறது. ஜியோவுக்கு நிகரான அடிமட்ட விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தின் விவரங்கள் இதோ.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bhari Airtel) மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திவிட்டன. இதனால், மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல வாய்ஸ் கால்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களும் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன.

Jio இல்லையா.. மாதாந்திரம் ரூ.175-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி வருது!

இந்த வாய்ஸ் கால்கள் திட்டங்களில் குறைவான டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், வேலிடிட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது. அப்படி வெறும் ரூ.175 மாத செலவில் 6 மாதங்களுக்கான வேலிடிட்டியை ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து வருகிறது. மற்ற சலுகைகளும் நன்றாக இருக்கின்றன.

விஐ ரூ 1049 திட்ட விவரங்கள் (Vi Rs 1049 Plan Details): இந்த விஐ திட்டத்தில் 180 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாத செலவை கணக்கிட்டால், ரூ.175 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls) அன்லிமிடெட்டாக வழங்கப்படுகிறது. கூடவே எஸ்எம்எஸ் (SMS) மற்றும் டேட்டா (Data) சலுகைகளும் இருக்கிறது.

ஆனால், அவை அதிகப்படியாக வழங்கப்படாது. அதாவது, 180 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். ஆனால், தினசரிக்கு டேட்டா கிடைக்காது. மொத்தமாக 12 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இதையே 180 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதேபோல 1800 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக வழங்கப்படும். ஆகவே, இந்த டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தினால், இது அதிக லாபத்தை கொடுக்கும் திட்டமாகும். இந்த வேலிடிட்டிக்குள் 12 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது. ஆகவே, டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும்.

இல்லையென்றால், 180 நாட்கள் வேலிட்டி மற்றும் தினசரி டேட்டாவுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், அந்த திட்டமானது கூடுதல் விலைக்கு கிடைக்கிறது. அதாவது, ரூ.1749ஆக விலையில் இருக்கிறது. இருப்பினும், இதற்கு ஏற்ப சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது. ஆகவே, தினமும் 1.5 ஜிபி டேட்டாவை பெறலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகை மூலம் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். தினமும் பயன்படுத்தாமல்விட்ட டேட்டாவுக்கு வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கிடைக்கிறது.

இதை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தலாம். மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் 2 ஜிபி பேக்கப் டேட்டா மாதந்தோறும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் எல்லாம் போக, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 1049 Plan With 180 Days Validity 12GB Data Unlimited Voice Calls Check 6 Months Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X