Jio, Airtel-ஐ ஓரங்கட்டிய Vi.. இனி 1 நாள் கணக்கில்ல.. 84 நாட்கள் கணக்கு.. அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் 5ஜி திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கின்றன. ஆனால், வோடபோன் ஐடியா (Vi) 4ஜி திட்டங்களிலேயே தினசரி லிமிட் இல்லாமல், அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) கொடுத்து, மிரளவிட்டிருக்கிறது. இதே திட்டத்தில் 5ஜி டேட்டா கிடைக்கும் இருக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் நிறுவனங்களில் கிடைக்கும் 4ஜி திட்டங்கள் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா, 2.5 ஜிபி டேட்டா அல்லது 3 ஜிபி டேட்டா என்று கொடுக்கப்படும். இதுபோக 2 ஜிபி டேட்டா, 24 ஜிபி டேட்டா போன்ற லம்ப்-சம் டேட்டா சலுகைகள் கொண்ட திட்டங்களும் கொடுக்கப்படும். ஆனால், விஐ ஆனது 4ஜியில் அன்லிமிடெட் டேட்டாவை சேர்த்துள்ளது.

அதாவது, வழக்கம்போல ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் கிடைக்கும் 5ஜி திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா கொடுப்பது போல இது கிடையாது. 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வேலிடிட்டி முழுவதும் 4ஜி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கடும்.
விஐ ரூ 1020 திட்ட விவரங்கள் (Vi Rs 1020 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி என்று எந்த லிமிட்டும் கிடையாது. 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும.
ஒருவேளை இதே திட்டத்தை 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் ரீசார்ஜ் செய்தால், 5ஜி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, தினசரி டேட்டா என்று எதுவும் ஒதுக்கப்படாது. இந்த டேட்டாவை போலவே 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை விஐ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதே போல 84 நாட்களுக்கு ஓடிடி சலுகையுடன் திட்டம் வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது.
இதில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்காது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், 5ஜி ஸ்மார்ட்போன் இருந்து, வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் கஸ்டமர்கள் இருந்தால், அவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். அதேபோல 2 ஜிபி டேட்டாவானது 4ஜி வேகத்திலும் பயன்படுத்த கிடைக்கும்.
விஐ ரூ 979 திட்ட விவரங்கள் (Vi Rs 979 Plan Details): இந்த திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தை போலவே 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. ஆனால், டேட்டா நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இதில் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கும் பொருந்தும். இந்த சலுகைகள் போக இதில் கூடுதலாக விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) ஓடிடி கிடைக்கிறது. இதில் சோனிலிவ் உள்ளிட்ட 19 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். லைவ் டிவி சேனல்களும் வருகின்றன.


Click it and Unblock the Notifications








