கேப்பில் புகுந்து சிக்ஸ் அடித்த VI: ரீசார்ஜ் திட்டங்களில் இனி கூடுதல் டேட்டா!

|

Vi நிறுவனம் வழங்கிய ரூ.409 மற்றும் ரூ.475 ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் முன்பைவிட அதிக டேட்டாக்கள் வழங்கப்படுகிறது.

அதிரடி நடவடிக்கையில் VI

அதிரடி நடவடிக்கையில் VI

இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் VI இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. சமீபத்திய டிராய் தகவலில் கூட ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை இணைத்ததாகவும் விஐ வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் தெரிவித்தது. இதையடுத்து விஐ அதிரடி நடவடிக்கையில் களமிறங்கி இருக்கிறது.

புது வாடிக்கையாளர்களை இணைக்கும் முயற்சி

புது வாடிக்கையாளர்களை இணைக்கும் முயற்சி

Vi நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியிலும் புது வாடிக்கையாளர்களை இணைக்கும் முயற்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி விஐ நிறுவனம் இரண்டு பிரபல ரீசார்ஜ் திட்டங்களை திருத்தம் செய்திருக்கிறது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திட்டமாகும்.

ரூ.409 மற்றும் ரூ.475 என்ற ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.409 மற்றும் ரூ.475 என்ற ரீசார்ஜ் திட்டங்கள்

Vi நிறுவனம் ரூ.409 மற்றும் ரூ.475 ஆகிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் திருத்தம் செய்திருக்கிறது. நிறுவனம் அதிக பயனர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் தற்போது 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் தினசரி 1 ஜிபி டேட்டாவை கூடுதலாக இணைத்திருக்கிறது. அதோடு வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா அணுகலையும் வழங்குகிறது.

ரூ 409 Vi ரீசார்ஜ் திட்டம்

ரூ 409 Vi ரீசார்ஜ் திட்டம்

ரூ.409 ரீசார்ஜ் திட்டம் தற்போது தினசரி 3.5 ஜிபி டேட்டா என மொத்தம் 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினசரி வழங்கப்படும் 100 எஸ்எம்எஸ் முடிந்ததும் உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1.5 செலுத்த வேண்டும்.

கட்டணமின்றி வரம்பற்ற டேட்டா சலுகை

கட்டணமின்றி வரம்பற்ற டேட்டா சலுகை

ரூ.409 திட்டமானது "பிங்கே ஆல் நைட்" நன்மையை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு மட்டும் தான் இந்த திட்டத்தில் கிடைக்கிறதா என்றால் அதுமட்டுமில்லை. கூடுதலாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த கட்டணமும் இன்றி வரம்பற்ற இணையத்தை அதிவேகத்தில் அனுபவிக்கலாம்.

Weekend Data Rollover நன்மையும் இருக்கு

Weekend Data Rollover நன்மையும் இருக்கு

அதோடு "Weekend Data Rollover" நன்மையையும் விஐ வழங்குகிறது. இதன்மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாமல் இருக்கும் மொத்த டேட்டாவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா வீணாகி விடுமோ என்ற கவலை இல்லாமல் மொத்தத்தையும் நீங்களே அனுபவிக்கலாம்.

பொழுதுபோக்கு அம்சங்களும் இலவசமாக பெறலாம்

பொழுதுபோக்கு அம்சங்களும் இலவசமாக பெறலாம்

மேலும் விஐ மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டுக்கான பாராட்டு அணுகலும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் செய்திகள் என அனைத்து பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை இலவசமாக அனுபவிக்கலாம். கூடுதலாக டேட்டா டிலைட்ஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. இதன்படி கூடுதல் செலவின்றி மாதத்திற்கு 2 ஜிபி டேட்டாவை அதிகமாக பெறலாம்.

ரூ.475 Vi ரீசார்ஜ் திட்டம்

ரூ.475 Vi ரீசார்ஜ் திட்டம்

Vi ரூ.475 திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினசரி வழங்கப்படும் 100 எஸ்எம்எஸ் முடிந்ததும் உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1.5 செலுத்த வேண்டும்.

விஐ மூவிஸ், டிவி பயன்பாட்டு அணுகல்

விஐ மூவிஸ், டிவி பயன்பாட்டு அணுகல்

"பிங்கே ஆல் நைட்" நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு மட்டுமின்றி கூடுதலாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த கட்டணமும் இன்றி வரம்பற்ற இணையத்தை பெறலாம். மேலும் "Weekend Data Rollover" நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வாரம் முழுவதும் பயன்படுத்தாமல் இருக்கும் மொத்த டேட்டாவும் வார இறுதி நாட்களில் வரவு வைக்கப்படும். விஐ மூவிஸ், டிவி பயன்பாட்டு அணுகல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

விடாமுயற்சியில் விஐ, ஏர்டெல்

விடாமுயற்சியில் விஐ, ஏர்டெல்

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. இரண்டாவது பெரிய நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. தொடர்ந்து விஐ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அடுத்த இடங்களை பிடித்திருக்கிறது. ஜியோ குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க காரணம், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். இருப்பினும் விடாமுயற்சியில் விஐ, ஏர்டெல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

ஜியோ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்து சந்தையில் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்திருக்கிறது. மறுபுறம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. டிராய் அறிக்கையின்படி ஏப்ரல் 2022-ல் மட்டும் சுமார் 15.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை விஐ இழந்துள்ளது.

எந்தெந்த நிறுவனத்துக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள்

எந்தெந்த நிறுவனத்துக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனம் 16.8 லட்சம் பயனர்களை சேர்த்துள்ளது. இதன்மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.5 கோடியாக அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்திருக்கிறது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சந்தாதாரர்கள் 36.11 கோடியாக அதிகரித்திருக்கிறது. விஐ எனப்படும் வோடபோன் ஐடியா சுமார் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன்மூலம் விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.9 கோடியாக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VI Revised its Popular Recharge plans Added Extra Data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X