Home
News

போச்சா: விஐ பயனர்களுக்கு விழுந்த இடி- ரூ.500 வரை ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு: நவ.,25 முதல் அமல்!

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது நவம்பர் 25 முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து விஐ விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்போடு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விஐ அறிவித்த கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதலே அமலுக்கு வருகிறது என்பதால், பயனர்கள் இந்த இரண்டு தினங்களிலேயே ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐ விலை உயர்வு

விஐ விலை உயர்வு

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வைத் தொடர்ந்து விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பயனரின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த புதிய கட்டண உயர்வானது நவம்பர் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்திருக்கிறது.

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

புதிய விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வின் மூலம் திட்டங்கள் ப்ரீமியம் ரகத்தில் இருக்கிறது. ரூ.500 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்ட விலை உயர்வு குறித்து பார்க்கையில், இந்த விலை ரூ.2399 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.2899 ஆக இருக்கிறது. திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது அதோடு இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறித்து பார்க்கையில் இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.300 விலை உயர்வு

ரூ.300 விலை உயர்வு

இதேபோல் மற்றொரு திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்துக்கு ரூ.300 விலை உயர்வு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரூ.1499 என்று இருந்த திட்டத்தின் விலை தற்போது ரூ.1799 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது 24 ஜிபி டேட்டா மற்றும் 2600 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.699 என்ற இருந்த திட்டத்தின் விலை ரூ.839 ஆக இருக்கிறது மேலும் ரூ.599 திட்டத்தின் விலை ஆனது ரூ.719 ஆக இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் சலுகையோடு வருகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. அதேபோல் ரூ.379-க்கு இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.459 ஆக இருக்கிறது.

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்கள்

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்கள்

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களை தவிர குரல் அழைப்பு திட்டமான ரூ.79 திட்டத்துக்கு ரூ.20 விலை உயர்வு அறிவித்து தற்போது இந்த திட்டம் ரூ.99 ஆக இருக்கிறது. இந்த திட்டமானது 200 எம்பி டேட்டா மற்றும் வினாடிக்கு 1 பைசா குரல் அழைப்பு கட்டணம் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதேபோல் டேட்டா பாப் அப் திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.48 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.58 ஆக இருக்கிறது. மேலும் ரூ.98 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.118 ஆக இருக்கிறது. மேலும் ரூ.251 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.298 ஆக இருக்கிறது மேலும் ரூ.351 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.418 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
VI Recharge Plan Price Hike: New recharge plans will come into effect from November 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X