இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் இதுவா?- வேகத்தில் Vi, அதிகத்தில் Jio!

|

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டின்படி 4ஜி வேகத்தில் விஐ(வோடபோன் ஐடியா) இந்தியாவின் மிக வேகமான மொபைல் ஆபரேட்டராக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து ஓக்லா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கை

ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கை

ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுகிறது. நாட்டின் மொபைல் நெட்வொர்க்குகளின் சராசரி பதிவிறக்க வேகம் ஆண்டுக்கு ஆண்டு 11.6 சதவீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம்

பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம்

மேலும் ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டில் Vi 13.74Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 6.19Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஏர்டெல் 13.58Mbps பதிவிறக்க வேகத்தையும் 4.15Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஜியோ 9.71Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 3.41Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது.

நகரங்களின் இணைய வேக பட்டியல்

நகரங்களின் இணைய வேக பட்டியல்

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுகிறது என்று ஓக்லா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொபைல் நெட்வொர்க்கின் மூலம் சராசரியாக ஹைதராபாத் 14.35 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 4.42 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது.

ஹைதராபாத் அதிக வேகம்

ஹைதராபாத் அதிக வேகம்

மும்பை 13.55 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 3.75 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், விசாகப்பட்டினம் 13.40 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 5.16 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 13.04 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலின்படி ஹைதராபாத் சராசரி மொபைல் பதிவிறக்கத்தில் அதிக வேகத்தை பெற்றிருக்கிறது.

இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஆப்.. இப்பொழுது பிளே ஸ்டோரில்..இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஆப்.. இப்பொழுது பிளே ஸ்டோரில்..

வேகமான 4ஜி நெட்வொர்க்

வேகமான 4ஜி நெட்வொர்க்

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சிக்கிம், அசாம் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள 120 நகரங்களில் அதிக பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தில் Vi இலிருந்து GIGAnet வேகமான 4ஜி நெட்வொர்க் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜியோ முதலிடம்

ஜியோ முதலிடம்

நாட்டில் வேகமாக 4ஜி தரவு வழங்கும் இடத்தில் விஐ இருந்தாலும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் 4ஜி சேவை கிடைக்கும் நெட்வொர்க் பட்டியலில் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. 2020 மூன்றாம் காலாண்டின் பட்டியலில் இந்தியாவின் சிறந்த 4ஜி சேவை வழங்குனர்களில் ஜியோ 99.7 சதவீதமாக முதலிடத்தில் இருக்கிறது.

இணைய வளர்ச்சியில் ஜியோ பங்கு பிரதானம்

இணைய வளர்ச்சியில் ஜியோ பங்கு பிரதானம்

அதேபோல் ஏர்டெல் ஜியோவுடன் மிக நெருக்கமாக 98.7 சதவீதத்தை கொண்டிருக்கிறது. இதில் விஐ 91.1 சதவீதம் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் இணைய வளர்ச்சியில் ஜியோ பங்கு பிரதானமானவையாகும்.

Best Mobiles in India

English summary
VI Provides Fastest 4G Internet in India Ookla Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X