Home
News

6 மாதத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ்.. யாரும் தராத விலையில் 180 நாள் வேலிடிட்டி.. என்ன திட்டம்?

இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன்-ஐடியா (விஐ) போன்ற நிறுவனங்கள் இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. யார் குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கி, மக்களை ஈர்க்கிறார்களென்ற யுக்தியை தான் இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இதை சரியாக செய்வதற்காக இந்த 3 நிறுவனங்களும் மாறிமாறி புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (new prepaid recharge plans) தொடர்ந்து சில-பல மாற்றங்களுடன் அறிமுகம் செய்து வருகின்றன. இப்போது வரை, இந்தியாவில் குறைந்த விலையில் அதிக நன்மை தரும் நிறுவனமாக ஜியோ பார்க்கப்படுகிறது. ஆனால், வோடபோன்-ஐடியா ஜியோவால் வழங்க முடியாத பல அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது என்பதே உண்மை.

6 மாதத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ்.. யாரும் தராத விலையில் நன்மை..

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான வோடபோன்-ஐடியா (Vi), 180 நாட்கள் வேலிடிட்டியுடன் (affordable 180 days validity prepaid plan) மிகவும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இங்கே மலிவு விலை 180 நாட்கள் சேவை செல்லுபடியாகும் சூழலில் உள்ளது என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில், இப்போது நாட்டில் அதிக மலிவு திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Vi prepaid recharge plan):

இங்கு நாம் பார்க்கப்போகும் விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Vi prepaid recharge plan) திட்டமானது ரூ. 949 விலையில் வருகிறது. இந்தத் திட்டத்தில், பயனர்களுக்கு டேட்டா (data) நன்மை, வாய்ஸ் கால்ஸ் (voice call) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்ற அணைத்து நன்மைகளும் கிடைக்கிறது. இருப்பினும், இது வோடபோன் ஐடியா வழங்கும் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களைப் போல்-அல்ல. காரணம், விஐ-ன் சிறப்பு இலவச நன்மைகள் இத்திட்டத்துடன் இல்லை.

வோடபோன் ஐடியா ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone-Idea Rs 949 Prepaid Plan):
வோடபோன்-ஐடியா (Vodafone Idea) வழங்கும் ரூ. 949 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS மற்றும் 12ஜிபி டேட்டாவுடன் (12GB data) வருகிறது. முழு வேலிடிட்டிக்கும், இந்த 12ஜிபி டேட்டா வாடிக்கையாளருக்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். தேவையைப் பொறுத்து, நீங்கள் இதை ஒரே நாளிலோ அல்லது செல்லுபடியாகும் காலம் முழுவதும் வரையோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மை உண்டா?

இந்தத் திட்டத்தில் கூடுதல் நன்மைகள் என்று எதுவும் இல்லை. வழக்கமாக, Vi வழங்கும் ரூ. 299 விலைக்கு மேல் விலையுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுடன் நிறுவனம் விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மைகளுடன் வருகின்றன. ஆனால் இந்த திட்டத்தில் அப்படி எதுவும் இல்லை. இதன் மூலம் பயனர்கள் கூடுதல் இலவசமாக எதையும் பெற மாட்டார்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் டேட்டா அனுபவத்தை அதிகரிக்க 4G டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தலாம்.

ரூ.17 முதல் வோடபோன்-ஐடியா டேட்டா வவுச்சர் (Vi Rs 17 Data Vouchers):

Vi ஆல் வழங்கப்படும் பல டேட்டா வவுச்சர்கள் (Vi data vouchers) ரூ.17 முதல் துவங்குகின்றன. இந்த திட்டத்துடன் இலவச 5ஜி சலுகையும் இல்லை. பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், நீங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தில் இவ்வளவு பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்றால், வரம்பற்ற 5G டேட்டா சலுகையையும் பெறுவீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், வோடபோன் ஐடியாவில் அப்படி இல்லை, ஏனெனில் Vi இன்னும் இந்தியாவில் 5G ஐ அறிமுகப்படுத்தவில்லை.

எதிர்பார்க்கப்படும் நிதி திரட்டலுடன், நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் Vi தனது 5G சேவையை வெளியிடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் டெல்லி மற்றும் புனேவில் நேரடி 5G கிளஸ்டர்களைக் கொண்டுள்ளது, ஆனால் இது உள் சோதனைக்காக மட்டுமே. மறுபுறம், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் ரூ.250 விலைக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இலவச 5ஜி நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vi Prepaid Recharge Plan Rs 949 Benefits and Details Explained Check It Right Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X