Home
News

தினமும் 3 ஜிபி டேட்டா.. பிறகு விடிய-விடிய இலவச டேட்டா.. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மை.. என்ன திட்டம் இது?

ஒவ்வொரு தனி நபருக்கும் டேட்டாவின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் தான் மக்கள் தினசரி டேட்டா நன்மை கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தேடி-தேடி ரீசார்ஜ் செய்கிறார்கள். இப்படி அதிக டேட்டாவுடன் OTT நன்மையையும் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வோம்.

இல்லை தானே.! அதிக டேட்டா நன்மையுடன் ஓடிடி (OTT) நன்மை கிடைக்கும் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். தினசரி டேட்டா திட்டங்களை தேடுவோருக்கு டெலிகாம் (Telecom) நிறுவனம் 1ஜிபி டேட்டா, 1.5ஜிபி டேட்டா, 2ஜிபி டேட்டா, 2.5ஜிபி டேட்டா மற்றும் 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை வழங்கி வருகிறது.

தினமும் 3 ஜிபி டேட்டா.. விடிய-விடிய இலவச டேட்டா.. என்ன திட்டம் இது?

இத்தகைய நன்மை கிடைக்கும் திட்டங்களுடன் OTT நன்மை இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? ஒன்றுக்கு இரண்டு லாபம் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இங்கு நாம் பார்க்கும் திட்டம் வோடபோன் ஐடியாவிடம் (Vi) இருந்து வருகிறது. பொழுதுபோக்கிற்காக, விஐ வழங்கும் கூடுதல் டேட்டாவை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இத்துடன் நிறுவனம் இப்போது OTT (ஓவர்-தி-டாப்) உள்ளடக்க இயங்குதள சந்தாக்களையும் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், வோடபோன் ஐடியாவிலிருந்து இந்தத் திட்டங்களை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது.

ஏர்டெல் வழங்கும் திட்டங்களில் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே Disney+ Hotstar உடன் இணைந்த சரியான திட்டத்தைக் கண்டறிவதற்கான உங்கள் சிறந்த சாய்ஸ் வோடபோன் ஐடியா மட்டுமே. இவை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வரும் Vi இன் ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பட்டியலிடுவோம்.

தினமும் 3 ஜிபி டேட்டா.. விடிய-விடிய இலவச டேட்டா.. என்ன திட்டம் இது?

28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வரும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் மொத்தம் 3 திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.601 விலையில் வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆகியவற்றை இலவசமாக வழங்குகின்றன.

ரூ.399 திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டாவும், ரூ.601 மற்றும் ரூ.499 திட்டங்களில் 3ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மைகளுடன் வருகின்றன. விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மைகளில் மூன்று விஷயங்களை வழங்குகிறது. இதில் வீகென்டு டேட்டா ரோல்ஓவர் (Weekend data rollover), டேட்டா டிலைட்ஸ் (Data delight) மற்றும் பிங்கே ஆல் நைட் (Binge all night) நன்மைகளை வழங்குகிறது..

ரூ.399 மற்றும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டங்களில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் விஐ இன் ரூ.601 திட்டம் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. Vodafone Idea ஆனது விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) எனப்படும் உள்நாட்டில் OTT இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Prepaid Plans With 3GB Daily Data and Disney+ Hotstar Mobile Subscription To Recharge Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X