இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா!

|

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட்டை விஐ என அறிவித்தது.

Vi பல்வேறு திட்டங்கள்

Vi பல்வேறு திட்டங்கள்

இந்த புதிய தோற்றம் மற்றும் புதிய உணர்வைக் கொண்ட Vi தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை குறித்து பார்க்கலாம்.

விஐ ரீசார்ஜ் திட்டம்

விஐ ரீசார்ஜ் திட்டம்

அதன்படி விஐ சில தினங்களுக்கு முன்பு வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது வாரம் முழுவதும் பயன்படுத்தாத டேட்டாவை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. விஐ ரீசார்ஜ் திட்டத்தில் கவர்ச்சிகரமான சலுகையையும் வழங்குகிறது. அது ரூ.1,197 திட்டமாகும். இந்த திட்டமானது ஆறுமாதம் செல்லுபடியாகும்.

ரூ.1,197 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1,197 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ ரூ.1,197 ப்ரீபெய்ட் திட்டமானது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஏர்டெல் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 180 நாட்களுக்கு கிடைக்கும். பொதுவாகவே ஆறு மாத ப்ரீபெயட் திட்டங்களை நிறுவனங்கள் வழங்கவது குறைவு. ரிலையன்ஸ் ஜியோ இதுபோன்ற திட்டத்தை ரூ.999 என்ற விலையில் வழங்கியது. ஆனால் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்!

180 நாட்கள் வேலிடிட்டி

180 நாட்கள் வேலிடிட்டி

விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.1,197 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் ஆறுமாதம் அதாவது 180 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் இந்த திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவச வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

தினசரி 1.5 ஜிபி டேட்டா

தினசரி 1.5 ஜிபி டேட்டா

விஐ ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 270 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.1,197 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி இருக்கிறது. ஓடிடி அணுகலும் இதில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VI Offers Daily 1.5GB Data For 6 Months: Here the Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X