ரூ.500 விலையில் Airtel, VI வழங்கும் திட்டம்: எது சிறந்தது? கூட்டி கழிச்சு பாருங்க புரியும்.!

|

வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் தரமான சலுகைகளை வழங்கி வருகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல புதிய சலுகைகளை வழங்க ஆர்வம் காட்டுகிறது இந்த இரண்டு நிறுவனங்கள்.

வோட்போன் ஐடியா VS  ஏர்டெல்

வோட்போன் ஐடியா VS ஏர்டெல்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது வோட்போன் ஐடியா நிறுவனம் ரூ.501 விலையில் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பின்பு ஏர்டெல் நிறுவனமும் ரூ.499 விலையில் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?

 ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 75ஜிபி டேட்டா (200ஜிபி டேட்டா ரோல்ஓவர்) நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் கூடுதல் நன்மைகள் மற்றும் Wynk பிரீமியம் போன்றவற்றை வழங்குகிறது.

இதுதவிர உங்களுக்கு 6 மாத Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் சில கூடுதல் நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!

 வோடபோன் ஐடியா ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 90ஜிபி டேட்டா (200ஜிபி டேட்டா ரோல்ஓவர்) நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் கூடுதல் டேட்டா சலுகையை கூட வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டம். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 3000 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர உங்களுக்கு 6 மாத Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் Vi Movies & TV VIP அணுகல், இரவில் வரம்பற்ற டேட்டா நன்மை மற்றும் சில சிறப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த வோடபோன்
ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டம்.

TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!

எது சிறந்தது?

எது சிறந்தது?

ஏர்டெல் ரூ.499 போஸ்டபெய்ட் திட்டத்தை விட வோடபோன் ஐடியாவின் ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது.இதுதவிர ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 போஸ்டபெய்ட் திட்டத்தை விட கூடுதல் சலுகையை வழங்குகிறது வோடபோன் ஐடியாலின் ரூ.501 திட்டம்.எனவே பயனர்கள் வோடபோன் ஐடியாவின் ரூ.501 போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

தூசியால் வந்த துன்பம்! செவ்வாய் கிரகத்தில் தூசியால் வந்த துன்பம்! செவ்வாய் கிரகத்தில் "சாகப்போகும்" NASA-வின் இன்சைட்!

 RedX போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

RedX போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

அதேபோல் சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வோபோன் ஐடியா நிறுவனம் அதன் RedXபோஸ்ட்பெய்ட் திட்டங்களை இணையதளம் மற்றும் செயலியில் இருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!

RedX சந்தாதாரர்கள்

தற்போதுள்ள RedX சந்தாதாரர்கள், அவர்களின் திட்டங்கள் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை அதிக மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கசப்பான உண்மை தான்! ஆனாலும் கூட BSNL பயனர்களுக்கு வேற வழி இல்ல!கசப்பான உண்மை தான்! ஆனாலும் கூட BSNL பயனர்களுக்கு வேற வழி இல்ல!

முதன்மை கடைகள்

அதேசமயம் RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஆன்லைனில் நிறுத்தியிருந்தாலும், நிறுவனத்தின் சில முதன்மை கடைகள் இன்னும் இந்த திட்டங்களை விற்பனை செய்கின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. கண்டிப்பாக இது வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த விஷயத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
VI New Rs 501 Plan vs Airtel 499 Postpaid Plan: Which is Better: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X