தூக்கி போட்ட VI சிம் கார்டை தூசி தட்டுங்க.. தினமும் 6 மணி நேரம் FREE அன்லிமிடெட் டேட்டா.. அள்ளிக்கோங்க!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர் என்கிற பட்டியலில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கி இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று என்கிற இடத்திற்கு வந்துள்ள வோடாபோன் ஐடியாவின் சிம் கார்டு "சில மாதங்களுக்கு முன்பு வரை" உங்களிடம் இருந்தது.. ஆனால் இப்போது இல்லையா?
ஆமெனில் அந்த சிம் கார்டை எப்படியாவது கண்டுபிடிக்க பாருங்கள். ஏனென்றால், தினமும் 6 மணி நேரங்களுக்கு இலவச அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை வோடாபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? அதன் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ரூ.401 க்கு வோடாபோன் ஐடியாவின் புதிய ரீசார்ஜ் அறிமுகம்!
வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 6 மணி நேரம் இலவசமாக (அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) அன்லிமிடெட் டேட்டா நன்மை, கூடவே சன் நெக்ஸ்ட் பிரீமியம் எச்டிக்கான (Sun NXT Premium HD) ஒரு வருட இலவச சந்தாவை வழங்கும் புதிய ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.401 ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் வோடாபோன் ஐடியாவிடம் ஏற்கனவே ரூ.401 மதிப்பிலான இன்னொரு ரீசார்ஜூம் உள்ளது. வாடிக்கையாளர்கள் குழப்பமடையை கூடாதென்று இதற்கு விஐ மேக்ஸ் 401 சவுத் (Vi Max 401 South) என பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் இது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அணுக கிடைக்கும் பல வகையான கன்டென்ட்களை வழங்கும் சன் நெக்ஸ்ட் பிரீமியம் எச்டி சந்தாவுடன் வருகிறது.
Vi Max 401 South திட்டத்தின் விரிவான நன்மைகள்
இலவச அன்லிமிடெட் டேட்டா மற்றும் சன் நெக்ஸ்ட் சந்தாவுடன் சேர்த்து ரூ.401 திட்டமானது 12 மாதங்களுக்கான சோனிலைவ் மொபைல் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. மற்ற நன்மைகளை பொறுத்தவரை, ஒரு மாதம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 3000 எஸ்எம்எஸ்கள், 50ஜிபி டேட்டா, 200ஜிபி மாதாந்திர டேட்டா ரோல் ஓவர் வசதி போன்றவைகளை வழங்குகிறது.
மேலும் இது விஐ மூவீஸ் மற்றும் டிவி விஐபி (Vi Movies & TV VIP), விஐ ஆப் வழியாக ஹங்காமா மியூசிக் (Hungama Music) மாறட்டும் விஐ கேம்ஸ் (Vi Games) உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திவிட்டால், அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு 1 ஜிபி டேட்டாவிற்கும் ரூ.20 செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
எனவே எப்போதும் உங்களுடைய மாதாந்திர டேட்டா நன்மை தீரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும், கூடவே கடந்த மாதத்தில் மீதான டேட்டாவை இந்த மாதத்திற்கு நகர்த்தும் டேட்டா ரோல் ஓவர் வசதியையும் திறம்பட பயன்படுத்திக்கொள்ளவும். அப்படி செய்யும் பட்சத்தில் இது சிறந்த போஸ்ட்பெயிட் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








