கேபிள் டிவி இருக்கா.? இனிமே அது கஷ்டம்.. வெறும் ரூ.248 போதும்.. 350+ டிவி.. 17 ஓடிடி சந்தா.. மாத வேலிடிட்டி!
கேபிள் டிவி கஸ்டமர்கள் ஓடிடி ஆப்களுக்கு மாறிவரும் நேரத்தில், லைவ் டிவி சேனல் சலுகைகளை டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க தொடங்கிவிட்டன. இதில் ஜியோ நிறுவனத்துக்கு நிகராக வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 350+ லைவ் டிவி சேனல்களின் சந்தா மட்டுமல்லாமல், சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 16 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி மிகவும் கம்மியான பட்ஜெட்டில் விஐ எம்டிவி திட்டங்கள் (Vi MTV Plans) கேபிள் டிவிக்கு மேலுமொரு அடியாக வந்திருக்கிறது.
இந்த விஐ எம்டிவி திட்டங்கள் மாதாந்திர சலுகைகளை கொடுக்கிறது. குறைந்தபட்சம் ரூ.154 முதல் அதிபட்சம் ரூ.248 வரையில் திட்டங்களின் விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த விலையிலேயே டிவி மற்றும் மொபைல்களில் லைவ் சேனல்கள், ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து மிரள விட்டிருக்கிறது. இந்த விஐ எம்டிவி திட்டங்களின் முழு சலுகை விவரங்களை இப்போது பார்ப்போம்.

விஐ எம்டிவி ரூ 154 திட்ட விவரங்கள் (Vi MTV Rs 154 Plan Details): இதுவொரு விஐ எம்டிவி லைட் (Vi MTV Lite) திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. 350+ லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.
இதுபோக ஜீ5 (ZEE5), சோனிலிவ் (SonyLIV), ஃபேன் கோட் (FanCode), கிளிக் (Klikk), அட்ரன்கீ (Atrangii), உல்லு (Ullu), மனோரமா மேக்ஸ் (Manorama Max), சாவ்பால் (Chaupal), பிளேஃபிளிக்ஸ் (Playflix), நம்மபிளிக்ஸ் (Nammaflix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷூமாரூமீ (Shemaroo Me), ஹங்கமா (Hungama), யூப்டிவி (YuppTV) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
மேலும், நெக்ஸ்டிவி (NexGTV) மற்றும் பாக்கெட் ஃபிலிம்ஸ் (Pocket Films) ஆகிய ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம். இந்த விஐ எம்டிவி லைட் திட்டத்துக்கு 1 மாத வேலிடிட்டி வருகிறது. மொபைலில் மட்டுமே டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். டிவியில் வேண்டுமானால், ரூ 202 திட்டத்தில் அந்த சலுகை கிடைக்கிறது.

விஐ எம்டிவி ரூ 202 திட்ட விவரங்கள் (Vi MTV Rs 202 Plan Details): இதுவொரு விஐ எம்டிவி ப்ரோ (Vi MTV Pro) திட்டமாகும். இதில் மொபைல் மட்டுமல்லாமல், டிவியிலும் ஓடிடி ஆப்கள் மற்றும் சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சலுகை கிடைக்கிறது.
மேலும், சோனிலிவ், ஃபேன்கோட், கிளிக், மனோரமா மேக்ஸ், சாவ்பால், பிளேஃபிளிக்ஸ், டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூமீ, ஹங்கமா, யூப்டிவி, நெக்ஸ்ஜிடிவி மற்றும் பாக்கெட் ஃபிலிம்ஸ் ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. 305+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். 5 ஜிபி டேட்டா மற்றும் 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது.
விஐ எம்டிவி ரூ 248 திட்ட விவரங்கள் (Vi MTV Rs 248 Plan Details): இதுவொரு விஐ எம்டிவி பிளஸ் (Vi MTV Plus) திட்டமாகும். இதில் அதிபட்சமாக சலுகைகள் கிடைக்கின்றன. முந்தைய திட்டத்தை போலவே மொபைல் மட்டுமல்லாமல், டிவியிலும் ஓடிடி மற்றும் சேனல்களை பார்த்து கொள்ளலாம். 350+ டிவி சேனல்கள் வருகிறது.
டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், ஃபேன்கோட், பிளேஃபிளிக்ஸ், கிளிக், அட்ரான்கீ, உல்லு, மனோரமா மேக்ஸ், சாவ்பால், நம்மபஃபிளிக்ஸ், டிஸ்ட்ரோடிவி, ஷீமாரூமீ, ஹங்கமா, யூப்டிவி, நெக்ஸ்ஜிடிவி மற்றும் பாக்கெட்ஃபிலிம்ஸ் ஆகிய ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். 6 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. 1 மாதத்துக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications