அடுத்த அடி கேபிள் டிவிக்கு.. ரூ.202-க்கு முடிந்தது.. 400+ டிவி சேனல்கள்.. 14 ஓடிடி ஓடிடி.. 1 மாதம் வேலிடிட்டி!
இதுபோதுமே, வேறென்ன வேணும், வெறும் ரூ.202 கொடுத்தா 400 டிவி சேனல்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஃபேன்கோட் உள்ளிட்ட 14 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், 16 மொழிகளில் கன்டென்ட்களை வழங்கினால் யாரு வேணானு சொல்லுவா? அப்படிவொரு திட்டம் வந்துருக்கு.
ஏற்கனவே, ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் டிவி சேனல்களின் சலுகைகளையும் வழங்க தொடங்கிவிட்டன. இந்த திட்டங்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், நாளுக்குநாள் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், கேபிள் டிவி பார்க்கும் பழக்கம் அடியோடு மாறி வருகிறது. இப்போது, அதற்கு மேலும் ஒரு அடியாக ஜியோ நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படி வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை களமிறக்கி இருக்கிறது. இதுவொரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) என்பதால் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏனென்றால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் வழக்கமாக ரீசார்ஜ் செய்வது போல வெறும் ரூ.202 செலுத்தினால் போதும். அவர்களுக்கு ஒரே ஆப்பில் 14 ஓடிடி ஆப்கள் மற்றும் 400+ டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்பட்டுவிடும். இந்த ஆப்பை மொபைல், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட்டிவி என்று பயன்படுத்தலாம்.
விஐ எம்டிவி ப்ரோ திட்டம் ரூ 202 விவரங்கள் (Vi MTV Pro Plan Rs 202 Details): இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi TV & Movies) ஆப்பின் சந்தா கொடுக்கப்படும். இந்த ஆப்பின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony LIV), பேன்கோட் (Fancode), பிளேஃபிளிக்ஸ் (PlayFlix) சந்தா கிடைக்கும்.

அதேபோல மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), கிளிக் (Klikk), சாவ்பால் (Chaupal), நம்மபிளிக்ஸ் (Nammaflix), ஹங்கமா (Hungama), டிஸ்கவரி (Discovery), ஷீமாரூமீ (Shemaroo ME), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), யூப்டிவி (YuppTV), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) ஆகிய ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக 400+ லைவ் டிவி சேனல்களை வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளலாம். நான்கு டிவைஸ்களில் இந்த டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒரு டிவைஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருப்பினும், சோனிலிவ் ஓடிடி ஆப்பை மட்டும் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
டிவி சேனல்களை பொறுத்தவரை ஆஜ் டக் (Aaj Tak), ஏபிபி நியூஸ் (ABP News), ரீபப்ளிக் டிவி (Republic TV), டிஸ்கவரி (Discovery), 9எக்ஸ்எம் (9XM), இந்தியா டுடே (India Today), இந்தியா 24x7 (India 24x7) மற்றும் என்டிவிடி (NDTV), டைம்ஸ்நவ் (Times Now), அனிமல் பிளாட் (Animal Planet) உள்ளிட்ட சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் கன்டென்ட்கள் மற்றும் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். இந்த விஐ மூவிஸ் மற்றும டிவி சேனல்களின் சலுகையானது, முன்பு வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இலவசமாக கிடைத்தது. இப்போது, அது நீக்கப்பட்டு, தனி திட்டமாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications