கேபிள் TV-க்கு அடுத்த வினை.. வெறும் ரூ.154-க்கு 400 சேனல்கள்.. 19 ஓடிடி சந்தா.. இனி அமேசான் MX பிளேயர் வருது!
விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) திட்டங்களில் 400 டிவி சேனல்கள், 19 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், இப்போது அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player) அனுகலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் ரூ.154 முதல் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் விலை, டிவியில் எப்படி பார்ப்பது, முழு சலுகைகள் என்ன, உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) இருக்கும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விஐ மூவிஸ் & டிவி திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் பெற்ற பிறகு ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், டிவியிலும் ஓடிடி ஆப்கள் (OTT Apps) மற்றும் லைவ் டிவி சேனல்களை (Live TV Channels) பயன்படுத்தி கொள்ளலாம்.

இதை விஐ மூவிஸ் & டிவி ஆப் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இது ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு டிவிகளிலும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது. இந்த விஐ மூவிஸ் & டிவி திட்டங்களில் ஏற்கனவே இருக்கும் ஓடிடி ஆப்களுடன் அமேசான் எம்எக்ஸ் பிளேயர் ஆப் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த எம்எக்ஸ் பிளேயர் ஆப் மூலம் தமிழ் உள்பட இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட மூவிக்கள் மற்றும் சீரிஸ்கள் கிடைக்கின்றன. இந்த எம்டிவி திட்டங்கள் விலை மற்றும் ஓடிடி ஆப்களின் அடிப்படையில் லைட், பிளஸ், ப்ரோ மற்றும் சூப்பர் என்று நான்கு திட்டங்களாக கிடைக்கிறது. விலை எப்படி?
விஐஎம்டிவி லைட் ரூ.154 திட்ட விவரங்கள் (ViMTV Lite Rs 154 Plan Details): இந்த திட்டத்தை மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். 2 ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜீ5 (ZEE5), சோனி லிவ் (Sony LIV), சன்நெக்ஸ்ட் (SunXNT), ஃபேன்கோட் (Fancode), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளேஃபிளிக்ஸ் (PlayFlix) கிடைக்கிறது.
மேலும், அட்ராங்கி (Atrangii), கிளிக் (Klikk), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), சாவ்பால் (Chaupal), நம்மபிளிக்ஸ் (Nammaflix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷீமாரூமீ (Shemaroo ME), யூப்டிவி (YuppTV), நெக்ஸ்ட்டிவி (NexGTv), பாக்கெட் ஃபிலிம்ஸ் (PocketFilms), எம்எக்ஸ் பிளேயர் (MX Player), அட்டாடை்ஸ் (Addatimes), கான்ச்சா லங்கா (Kanccha Lannka) ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன.
விஐஎம்டிவி சூப்பர் ரூ.175 திட்ட விவரங்கள் (ViMTV Lite Rs 175 Super Details): இந்த திட்டத்தை மொபைல் மட்டுமல்லாமல், டிவியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். 10 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 400 லைவ் டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ளலாம். சொல்லப்போனால், முந்தைய திட்டத்துக்கும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும்.
விஐஎம்டிவி ப்ரோ ரூ.202 திட்ட விவரங்கள் (ViMTV Pro Rs 202 Plan Details): இந்த திட்டத்தில் ஜயோஹாட்ஸ்டார் சந்தா கூடுதலாக கிடைக்கும். அதேபோல சோனிலிவ், சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட 17 ஓடிடி ஆப்கள் கொடுக்கப்படும். இதையும் மொபைல் மற்றும் டிவியில் பயன்படுத்தலாம். 5 ஜிபி டேட்டா மற்றும் 1 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. 400 டிவி சேனல்கள் கிடைக்கிறது.
விஐஎம்டிவி பிளஸ் ரூ.248 திட்ட விவரங்கள் (ViMTV Plus Rs 248 Plan Details): இந்த திட்டத்தில் ஜியோஹாஸ்டார் உள்ளிட்ட 20 ஓடிடி ஆப்கள் கிடைக்கும். அதேபோல 400 டிவி சேனல்கள் மற்றும் 1 மாத வேலிடிட்டி கிடைக்கும். 6 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டங்கள் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இதற்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடையாது.


Click it and Unblock the Notifications








