Home
News

Vi அடிச்ச அடி.. Jio-வுக்கு இடி.. 100 ரூபாயில் 20GB டேட்டா.. இந்த குட்டி Vi MiFi டிவைஸ் இத்தனை அற்புதம் ?

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone-Idea) அல்லது விஐ (Vi) இப்போது புதிய Vi MiFi பிளான் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது Vi MiFi டிவைஸ் உடன் வருகிறது.

Vi இன் புதிய திட்டம் மற்றும் MiFi டிவைஸ் பற்றிய தகவல்கள் இதோ. குறைந்த செலவில் வைஃபை சேவை வேண்டுமா? உங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தி போர் அடித்துவிட்டதா? அல்லது அதிக எண்ணிக்கையிலான டிவைஸ்களை உங்கள் போனின் ஹாட்ஸ்பாட் உடன் இணைக்க முடியவில்லையா? அல்லது உங்கள் வைஃபை வேகம் போதவில்லையா? இந்த Vi MiFi பிளான் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Vi அடிச்ச அடி.. Jio-வுக்கு இடி.. 100 ரூபாயில் 20GB டேட்டா..

வோடபோன் ஐடியா நிறுவனம் டெலிகாம் துறையில் நடக்கும் போட்டியை சமாளிக்க பல வழிகளில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முயன்று வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் Vi MiFi Plans. இது விஐ நிறுவனத்தால் வழங்கப்படும் வைஃபை இணைப்பாகும். இதற்கென்று, நிறுவனம் ஒரு பிரத்தியேகமான போர்ட்டபிள் வைஃபை ரௌட்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Vi அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Vi MiFi Plans திட்டத்தின் கீழ் நிறுவனம் 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ரூ. 399 மற்றும் ரூ. 499 விலையில் வருகிறது. இந்த Vi MiFi சேவையின் மூலம், இனி ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் இருந்து ஹாட்ஸ்பாட் இயக்கி, மற்ற டிவைஸ்களை நெட்வொர்க் உடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

இனி இந்த Vi MiFi ரௌட்டர் மூலம் உங்களுக்கு தேவையான 10 டிவைஸ் வரை ஒரே நெட்வொர்க்கின் கீழ் இணைத்து யூஸ் செய்துகொள்ளலாம். இது உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை பாதுகாக்கிறது. இந்த Vi MiFi டாங்கில் 6 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது. இது 150Mbps வேகம் வரை அணுக அனுமதிக்கிறது. சரி, இப்போது நிறுவனம் வழங்கும் 2 புதிய திட்டங்களின் விபரங்களை பற்றி பார்க்கலாம்.

Vi MiFi Plans: ரூ.399 மற்றும் ரூ.499 விலையில் வருகிறது. ரூ.399 திட்டமானது அதன் பயனருக்கு 50GB டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், ரூ. 499 திட்டமானது அதன் பயனருக்கு 90GB டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 200GB வரையிலான டேட்டா ரோல்-ஓவர் நன்மையை வழங்குகிறது. FUP வரம்பிற்கு பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு GB டேட்டாவுக்கும் ரூ.20 வசூலிக்கப்படும்.

Vi அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்துடன் கிடைக்கும் போர்ட்டபிள் வைஃபை ரௌட்டர் சாதனத்தை பெற நீங்கள் தனியாக ஒருமுறை கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதை தவற வேறெந்த கூடுதல் கட்டணமும் ரௌட்டர் Vi MiFi திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படாது என்று வோடபோன் ஐடியா நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, Vi டேட்டா வவுச்சர் திட்டங்கள் ரூ.100 முதல் துவங்குகிறது. வோடபோன் ஐடியா அதன் பயனர்களுக்கு ரூ.100 செலவில் 20GB டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், இதன் ரூ.200 திட்டமானது 50GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தையும் நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi MiFi Plans Launched With Rs 399 50GB Data and Rs 499 90GB Data Benefits To Recharge Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X