Home
News

வோடபோனுக்கு கும்பிடு.. வெறும் ரூ.601 போதும்... 2 சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா!

ஜியோ நிறுவனத்துக்கு துளியும் குறைவில்லாமல் வோடபோன் ஐடியாவில் வெறும் ரூ.601 மதிப்புள்ள திட்டத்தில் 2 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.

விஐ மேக்ஸ் ரூ 601 திட்ட விவரங்கள் (Vi Max Rs 601 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், ஓடிடி மட்டுமல்லாமல் கூடுதலாக ஒரு சிம் கார்டுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு பிரைமரி சிம் மற்றும் செகண்டரி என்று 2 கார்டுகளுக்கு சலுகைகளை பெறலாம்.

ரூ.601 போதும்... 2 சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா!

இதில் பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதோடு 70 ஜிபி டேட்டா மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 3000 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல செகண்டரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதுபோக 40 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

அதோடு ஹங்கமா மியூசிக் (Hungama Music), விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) மற்றும் விஐ கேம்ஸ் (Vi Games) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் போக, 2 முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை ஆப்சன்களுடன் பெற்று கொள்ளாம். அதில், 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சப்ஸ்கிரிப்ஷன் அடங்கும்.

ரூ.601 போதும்... 2 சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா!

அதேபோல 12 மாதங்களுக்கு சோனிலிவ் (Sony LIV), ஒரு வருடத்துக்கான சன்நெக்ட்ஸ் (Sun NXT Premium) சப்ஸ்கிரிப்ஷனை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் பலன்களை வைத்து பார்க்கையில் ஒரு சிம் கார்டுக்கு வெறும் ரூ.300 மட்டுமே தேவைப்படுவதால், நல்ல திட்டமாகவே இருக்கிறது. இதேபோல ரூ 1001 மற்றும் ரூ 1151 விலையில் 2 திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது, பார்ப்போம்.

விஐ மேக்ஸ் ரூ 1001 திட்ட விவரங்கள் (Vi Max Rs 601 Plan Details): இந்த திட்டத்தில் ஒரு பிரைமரி மற்றும் 3 செகண்டரி சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெறலாம். ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 140 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை வழங்கப்படுகிறது.

இதுபோக முந்தையை திட்டத்தில் வரும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. அதேபோல செகண்டரி சிம் கார்டுகளுக்கு தலா 40 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். பிரைமரி சிம் கார்டில் இருந்து 20 ஜிபி டேட்டாவை செகண்டரிக்கு ஷேர் செய்துகொள்ள முடியும்.

ரூ.601 போதும்... 2 சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா!

விஐ மேக்ஸ் ரூ 1151 திட்ட விவரங்கள் (Vi Max Rs 1151 Plan Details): இந்த திட்டத்தில் ஒரு பிரைமரி மற்றும் 4 செகண்டரி என்று 5 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. மற்றபடி இதன் மீதமுள்ள சலுகைகள் அனைத்தும் முந்தைய திட்டத்தை போலவே இருக்கிறது. இருப்பினும், அதிபட்சமாக 25 ஜிபி டேட்டாவை பிரைமரி சிம் கார்டில் இருந்து செகண்டரி சிம் கார்டுக்கு மாற்றி கொள்ள முடியும். இந்த மூன்று திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Max Rs 601 Family Plan Come With 2 SIM Connections, 70GB Data, Unlimited Voice OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X