Home
News

இது போதுமே.. ரூ.451-க்கு ப்ரீ நைட் டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. OTT சந்தா.. போஸ்ட்பெய்ட் யூசர்களுக்கு குஷி!

வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரூ.451 மதிப்பிலான திட்டமானது, ஆரம்ப விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-டேட்டா (Lumpsum Data), அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகளை கொடுக்கிறது. இந்த விஐ மேக்ஸ் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Vi Max Postpaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விஐ மேக்ஸ் ரூ 451 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Vi Max Rs 451 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls) சலுகையின் கீழ் லோக்கல் (Local), எஸ்டிடி (STD), நேஷனல் ரோமிங் (National Roaming) சலுகை கொடுக்கப்படுகிறது. டேட்டாவில் மூன்று சலுகைகளை பெற்று கொள்ளலாம். லம்ப்-சம், நைட் மற்றும் ரோலோவர் கிடைக்கிறது.

இது போதுமே.. ரூ.451-க்கு ப்ரீ நைட் டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. OTT!

ஆகவே, 50 ஜிபி டேட்டாவை லம்ப்-சம் சலுகையில் பெற்று கொள்ளலாம். ஆனால், நைட் பிஞ்ச் அன்லிமிடெட் டேட்டா (Night Binge UL Data) சலுகை மூலம் இலவச டேட்டாவும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவசமாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பயன்படுத்தலாம்.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகைகளும் லம்ப்-சம் முறையில் கிடைக்கிறது. அதாவது, 3000 எஸ்எம்எஸ்கள் வேலிடிட்டி முழுவதும் கொடுக்கப்படும். இந்த மொத்த எஸ்எம்எஸ்களை தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ள முடியும். தினசரிக்கு 100 என்ற லிமிட் இதில் கிடையாது. இந்த முக்கிய சலுகைகளுக்கு பிறகு ஓடிடி இருக்கிறது.

ஆனால், இந்த ஓடிடி சந்தாவானது, ஆப்ஷன் மூலம் கொடுக்கப்படுகிறது. அதாவது, ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் போன்ற மல்டிபிள் ஆப்ஷன்களில் ஏதாவது ஒரு ஓடிடி சந்தாவை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், ஈஸ்மைடிரிப், நார்டன் போன்ற சலுகைகளில் ஏதாவது ஒன்றை கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

என்னென்ன ஆப்ஷன்கள் கிடைக்கிறது? ஓடிடி ஆப்ஷன்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNXT) ஆகியவை இருக்கின்றன. அதேபோல விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தாவும் கொடுக்கப்படும். இதில் ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு 1 வருட மொபைல் சந்தா கிடைக்கும்.

சோனிலிவ் ஓடிடிக்கும் 360 நாட்கள் சந்தா கிடைக்கும். அதேபோல சன்நெக்ஸ்ட் ஓடிடிக்கும் 1 வருட சந்தா கிடைக்கும். இந்த மூன்று ஆப்களையும் விஐ மூவிஸ் & டிவி சந்தாவில் பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த விஐ மூவிஸ் & டிவி சந்தாவானது 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே, எது சிறந்தது என்பதை வோடபோன் கஸ்டமர்கள் முடிவு செய்யலாம்.

இந்த சலுகைகள் போக ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) அனுகல் 1 வருடத்துக்கு கிடைக்கிறது. நார்டன் (Norton) மொபைல் செக்யூரிட்டி கவரும் 1 வருடத்துக்கு கொடுக்கப்படுகிறது. இதில் ஈஸ்மைடிரிப் சலுகையில் ரிட்டர்ன் பிளைட் டிக்கெட்டுகளில் ரூ 750 மதிப்பில் ஆஃபர் கிடைக்கும். இப்படியான சலுகைகளை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு வோடபோன் ஐடியா கொடுக்கிறது.

இதுபோக ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் சலுகைகளை கொடுக்கும் திட்டம் இருக்கிறது. இதில் பிரைமரி மற்றும் செகண்டரி சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த வோடபோன் ஐடியா ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.701 விலையில் இருந்து தொடங்குகிறது. டெலிகாம் செய்திகளுக்கு எங்களை பின் தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Max Rs 451 Postpaid Plan Offers 50GB Data Unlimited Voice Calls Night Binge Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X