Home
News

Vodafone-க்கு கும்பிடு.. வெறும் ரூ.401 போதும்.. ஒரு வருட ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100GB டேட்டா!

ஜியோ வாடிக்கையாளர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.401 திட்டத்தில் 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஆப்ஷனில் ஒரு வருடத்துக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன்நெக்ஸ்ட் போன்ற ஓடிடி சந்தாவை வோடபோன் ஐடியா வழங்குகிறது.

விஐ மேக்ஸ் ரூ 401 திட்ட விவரங்கள் (Vi Max Rs 401 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

Vodafone-க்கு கும்பிடு.. வெறும் ரூ.401 போதும்.. ஒரு வருட ஓடிடி சந்தா!

அதோடு கூடுதலாக 50 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி ரோலோவர் டேட்டா (Roll Over Data) சலுகை வழங்கப்படும். மேலும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டாவை பற்றிய கவலை இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடையாது.

இதுபோக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல மொத்தமாக 3000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. விஐ கேம்ஸ் (Vi Games) சலுகை கிடைக்கிறது.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பார்க்கையில், விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சலுகை கிடைக்கிறது. மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disnep+ Hotstar), சோனிலிவ் (SonyLIV) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNXT) ஓடிடி சலுகை வருகிறது. இதில் ஒரு ஓடிடி தளத்தை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இல்லையென்றால், ஈஸ்மைடிரிப் (EaseMy Trip) அல்லது நார்டன் 360 மொபைல் செக்யூரிட்டி (Norton 360 Mobile Security) ஆப்ஷனில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இதில் ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு 1 வருட மொபைல் சந்தா கொடுக்கப்படும். அதேபோல சோனிலிவ் ஓடிடிக்கு 12 மாதங்கள் சந்தா கிடைக்கும்.

மேலும், சன்நெக்ஸ்ட் ஓடிடியை 1 வருடத்துக்கு பயன்படுத்தலாம். அதேபோல ஈஸ்மைடிரிப் மற்றும் நார்டன் 360 மொபைல் செக்யூரிட்டி சலுகைகளும் ஒரு வருடத்துக்கு வழங்கப்படுகின்றன. ஆகவே, இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிகப்படியான சலுகைகளை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை 2 ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் கூடுதல் டேட்டா சலுகை வேண்டுமானால், இதைவிட ரூ.100 கூடுதல் செலவில் மற்றொரு போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் டேட்டா உள்ளிட்ட அனைத்திலும் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. இதன் முழு சலுகை விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விஐ மேக்ஸ் ரூ 501 திட்ட விவரங்கள் (Vi Max Rs 501 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. ஆனால், முந்தைய திட்டத்தைவிட அதிகமாக 90 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் 200 ஜிபி ரோலோவர் டேட்டா சலுகை கிடைக்கிறது. கூடுதல் டேட்டா சலுகைக்கு பதிலாக ஸ்விக்கிஒன் (SwiggyOne) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக விஐ கேம்ஸ் மற்றும் விஐ மூவிஸ் & டிவி சலுகையும் வருகிறது. முந்தைய திட்டத்தை போலவே ஓடிடி ஆப்ஷன் வருகின்றன.

ஆனால், இந்த திட்டத்தில் 2 ஓடிடி ஆப்களை தேர்ந்தெடுக்கலாம். ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி ஆப்கள் மற்றும் முந்தை திட்டத்தில் இருந்த ஈஸ்மைடிரிப் போன்ற மற்ற ஆப்களும் வருகிறது. இந்த ஆப்களுக்கும் 1 வருடத்துக்கு சந்தா கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Max Rs 401 Plan Offers Unlimited Voice Calls, 50GB Data, Vi Movies And TV, OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X