Home
News

வெச்சான்பாரு வோடபோன்.. ரூ.1001 போதும்.. 4 சிம் கனெக்சன்.. ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்.. ஸ்விக்கி மெம்பர்ஷிப்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ஒரே போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 4 சிம் கனெக்சன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், முன்னணி ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுபோதாதென்று ஸ்விக்கி ஒன் (Swiggy One) மெம்பர்ஷிப் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஐ மேக்ஸ் ரூ 501 திட்ட விவரங்கள் (Vi Max Rs 501 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 3000 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல 90ஜிபி டேட்டா மற்றும் 200ஜிபி ரோலோவர் டேட்டா சலுகை கிடைக்கிறது. விஐ மூவிஸ் & டிவி, விஐ கேம்ஸ் மற்றும் ஹங்கமா மியூசிக் சந்தா கிடைக்கிறது.

ரூ.1001 போதும்.. 4 சிம் கனெக்சன்.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

விஐ மேக்ஸ் ரூ 701 திட்ட விவரங்கள் (Vi Max Rs 701 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் 3000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. விஐ மூவிஸ் & டிவி, விஐ கேம்ஸ் மற்றும் ஹங்கமா மியூசிக் சலுகையும் கொண்டிருக்கிறது.

விஐ மேக்ஸ் ரெட் எக்ஸ் ரூ 1101 திட்ட விவரங்கள் (Vi Max RED X Rs 1101 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், 3000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு ஏர்போர்ட் லவுஞ்ச் அக்சஸ் மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் சலுகை கிடைக்கிறது. விஐ மூவிஸ் & டிவி, விஐ கேம்ஸ், ஹங்கமா மியூசிக், மேக்மைடிரிப் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

விஐ மேக்ஸ் ரூ 1001 திட்ட விவரங்கள் (Vi Max Rs 1001 Plan Details): இதுவொரு ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் கூடுதலாக 4 சிம் கார்டுகளை கனெக்ட் செய்துகொள்ளலாம். பிரைமரி நம்பருக்கு அன்லிமிடெட் கால்கள், 3000 எஸ்எம்எஸ்கள், 140 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படுகிறது.

அதேபோல கூடுதல் சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 40 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் கிடைக்கிறது. இதுபோக 20 ஜிபி கூடுதல் டேட்டாவை பிரைமரியில் இருந்து கூடுதல் சிம் கார்டுக்கு ஷேர் செய்து கொள்ளலாம். மேலும், விஐ மூவிஸ் & டிவி, விஐ கேம்ஸ், ஹங்கமா மியூசிக் சலுகை கிடைக்கிறது.

விஐ மேக்ஸ் ரூ 1151 திட்ட விவரங்கள் (Vi Max Rs 1151 Plan Details): இந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 5 கூடுதல் சிம் கார்டுகளை கனெக்ட் செய்து கொள்ளலாம். இதில் பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 140 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தை போலவே, விஐ மூவிஸ் & டிவி, விஐ கேம்ஸ், ஹங்கமா மியூசிக் சலுகையை பயன்படுத்தலாம். அதேபோல கூடுதல் சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 40 ஜிபி டேட்டா 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டாவை பிரைமரியில் இருந்து கூடுதல் சிம் கார்டுக்கு ஷேர் செய்துகொள்ளலாம்.

இந்த 5 திட்டங்களிலும் ஓடிடி உள்பட கூடுதலாக சில சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதாவது, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஈஸ்மைடிரிப் (Easemytrip), நார்டன் 360 மொபைல் செக்யூரிட்டி (Norton 360 Mobile Security மற்றும் ஈசிடின்னர் (EazyDiner) ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

இதில் ஏதாவது 2 சந்தாவை தேர்ந்தெடுத்து, அதை பெற்று கொள்ளலாம். இந்த ஆப்ஷனில் இப்போது ஸ்விக்கி ஒன் (Swiggy One) மெம்பர்ஷிப் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்தால், 6 மாதங்களுக்கான 2 மெம்பர்ஷிப் கூப்பன்கள் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.149க்கு மேல் ஃபுட் ஆர்டர் செய்தால், 30 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படும்.

அதேபோல ரூ.199க்கு மேல் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்தால், ப்ரீ டெலிவரி சலுகை கிடைக்கும். 40 சதவீத தள்ளுபடி கொண்ட டைன்அவுட் (Dineout) கூப்பன்கள் 2 கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஸ்விக்கி ஜீனி டெலிவரிக்கு 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு எங்களை பின் தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Max Rs 1001 Plan With 4 Connections, Unlimited Calls, 140GB Data Check Swiggy One Membership
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X