குரு பெயர்ச்சியில் Jio, Airtel, சனிப் பெயர்ச்சியில் VI.. இப்பவே ஓடுவது நல்லது!

|

TRAI வெளியிட்ட தரவுகளின்படி, வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 40,00,000 வரை குறைந்திருக்கிறது எனவும் மொத்தமாக இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் சுமார் 117.19 கோடி என குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் ஜியோ, ஏர்டெல் இன் நிலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அசுர வளர்ச்சியில் ஜியோ

அசுர வளர்ச்சியில் ஜியோ

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்னதாக தொய்வு நிலை கண்ட ஏர்டெல் சமீப காலமாக உச்சத்தை தொட்டு வருகிறது. முதலிடத்தில் இருக்கும் ஜியோ மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக 5ஜி அறிமுகமான பிறகு.

குரு பெயர்ச்சியில் Jio, Airtel.. சனிப் பெயர்ச்சியில் VI

குரு பெயர்ச்சியில் Jio, Airtel.. சனிப் பெயர்ச்சியில் VI

இந்தியாவின் மொத்த மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 3.6 மில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஜாம்பவனாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை மாதந்தோறும் அதிக பயனர்களை இணைத்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது இடத்தில் இருக்கும் விஐ கடுமையாக வாடிக்கையாளர்கள் இழப்பை சந்தித்து வருகிறது.

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இன் அறிக்கைப்படி, இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டரான ஜியோ செப்டம்பர் மாதம் மட்டும் 7,20,000 வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதன்மூலம் ஜியோ மீண்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தன்னை நிரூபித்திருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் பாரதி ஏர்டெல் 4,12,000 வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனமானது அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. அதாவது வோடபோன் ஐடியா (விஐ) ஆனது 40,00,000 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வு

பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வு

இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2022 இறுதியில் சுமார் 117.19 கோடியாக குறைந்திருக்கிறது. 2022 செப்டம்பர் இறுதியில் 0.28 சதவீத மாதாந்திர வளர்ச்சியுடன் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 81.6 கோடியாக உயர்ந்துள்ளது என டிராய் தெரிவித்திருக்கிறது.

முதல் இடத்தில் ஜியோ

முதல் இடத்தில் ஜியோ

4ஜி தொழில்நுட்பத்தில் இணையதள பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகிய இரண்டின் வேகத்திலும் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. அதாவது இது தொடர்பாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட தகவல் என்னவென்றால், 4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வேகத்திலும் விஐ நிலை இதுதான்

வேகத்திலும் விஐ நிலை இதுதான்

கடந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்குச் சராசரியாக 20.3 எம்பிபிஎஸ் என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்க வேகத்தில் தனது முன்னிலையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம் பதிவிறக்க வேகத்தில் 15எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4.5எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ சற்று பின்தங்கியுள்ளது

ஜியோ சற்று பின்தங்கியுள்ளது

ஆனால் பதிவேற்ற வேகத்தை பொருத்தவரை ஜியோ சற்று பின்தங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஜியோவின் பதிவேற்ற வேகம் 6.4எம்பிபிஎஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 6.2எம்பிபிஎஸ் ஆகக் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்தப் பிரிவில் ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா

ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா

குறிப்பாக பதிவேற்ற வேகத்தில் ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா சாரசரியாக 4.5 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்பின்பு ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 2.7 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Best Mobiles in India

English summary
VI Loss and Jio, Airtel Add More Subscribers in September: Trai Reveals india Mobile Subscribers Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X