Vi SIM இருக்கா? இந்த 3 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. சென்னை, சேலத்தை அடுத்து 5ஜி சேவைகள் இங்கு தொடக்கம்!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக 5ஜி சேவையை கொடுக்க தொடங்கி இருக்கும், வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆனது தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. சென்னை, புதுச்சேரி மற்றும் சேலத்தில் அண்மையில் விஐ 5ஜி சேவைகள் (Vi 5G Services) தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே கஸ்டமர்களுக்கு 5ஜி சேவையை கொடுத்து வருகின்றன. 4ஜி சேவையில் இருக்கும் கஸ்டமர்களை 5ஜி சேவைக்கு மாற்றுவதற்காக இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்க தொடங்கின. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவசமாக கொடுத்து வருகின்றன.

இந்த டேட்டாவுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம், அதனுடயை 5ஜி டேட்டா சேவையை படிப்படியாக கொடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்தாண்டு முதல் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது. அண்மையில் சென்னையில் தொடங்கியது.
அதேபோல புதுச்சேரி மற்றும் சேலத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டன. இதனால், மற்ற மாவட்டங்களில் இருக்கும் கஸ்டமர்களிடையேயும் எதிர்பார்ப்பு எகிறியது. இதற்கு ஏற்ப கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மூன்று மாவட்டங்களில் இருக்கும் அதிக மக்கள் அடர்த்தி இருக்கும் பகுதிகள், வணிக மண்டலங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்துவதில் இந்த 5ஜி விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போலவே வோடபோன் ஐடியாவிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலசமாக கிடைக்கிறது.
ஆனால், மாதாந்திர கேப் இருக்கிறது. அதாவது, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் ஒரு குறிப்பிட்ட ஜிபி வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு பிறகு 4ஜி டேட்டாவின் பயன்பாடு தொடங்கிவிடும். இது ஜியோவில் கிடையாது. எந்த லிமிட்டும் இல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். திட்டங்கள் எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டில் ரூ.349 முதல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும் விஐ திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் மாதாந்திர வேலிடிட்டி மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா கிடைக்கும். வோடபோன் ஐடியாவில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக டேட்டா சலுகைகளும் கொடுக்கப்படும். இந்த ஆரம்ப விலை 5ஜி திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.
விஐ ரூ.349 திட்ட விவரங்கள் (Vi Rs.349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. இந்த சேவையை பெறுவதற்கு உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் விஐ 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் கஸ்டமர்கள் இருக்க வேண்டும்.
நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. இது 4ஜி வேகத்தில் கிடைக்கும். ஆகவே, இந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகை வழியாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படும்.
வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையும் கிடைக்கும். 2 ஜிபி டேட்டா கிடைக்கும்படி டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் & டிவி சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications