FIFA World Cup 2026 LIVE ஆக பார்க்க Vodafone Idea-வின் புது பிளான்.. 90 நாள் வேலிடிட்டி.. எந்த ரீசார்ஜ்?
வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, தனது பயனர்களுக்காக ஒரு புதிய ஃபுட்பால் வேர்ல்ட் கப் சீசன் பாஸ்-ஐ (Football World Cup Season Pass) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வி மூவீஸ் அன்ட் டிவி (Vi Movies & TV) வழியாக ஜீ5 (ZEE5) தளத்தின் கீழ் கால்பந்து போட்டிகளைக் காண முடியும்.
ரூ.798 விலை கொண்ட இந்த தொகுப்பு (Bundle), விளையாட்டு போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்யும் வசதி, கூடுதல் டேட்டா மற்றும் ஜீ5 சந்தா ஆகியவற்றை ஒரே திட்டத்தின் கீழ் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் ஜீ5-யில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பதுடன், 30 நாட்களுக்கு 10ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்களுக்கான ஜீ5 சந்தாவையும் பெறுவார்கள்.

வி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த பாஸ் ஒரு டிவைஸில் (துevice) மட்டுமே பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. கூடுதல் டேட்டா வசதியுடன் தங்கள் மொபைல் போன்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு தான் ரூ.798 மதிப்பிலான இந்த ஃபுட்பால் உலகக் கோப்பை சீசன் பாஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஓடிடி கூட்டாண்மைகளையும், கன்டென்ட் சார்ந்த தொகுப்புகளையும் அதிகளவில் பயன்படுத்தி வரும் நேரத்தில் இந்த அறிமுகம் வந்துள்ளது. நிறுவனங்கள் இனி வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்களில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை உருவாக்குவதற்காக, அவர்கள் டிஜிட்டல் சேவைகள், பொழுதுபோக்கு தளங்கள், விளையாட்டு அணுகல் மற்றும் ஆப் வழியிலான அனுபவங்களை சேர்க்கின்றனர்.
வோடபோன் ஐடியாவைப் பொறுத்தவரை, கால்பந்து உலக கோப்பை சீசன் பாஸ் ஆனது, பயனர்களுக்கு போட்டி தொடரின் ஒளிபரப்பை நேரடியாக அணுகுவதற்கான ஒரு தொகுப்பு விருப்பத்தை வழங்குவதோடு, மொபைல் பயன்பாட்டிற்காக கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களில் போட்டிகள் அல்லது அது தொடர்பான கன்டென்ட்களை ஸ்ட்ரீம் செய்யத் திட்டமிடும் பயனர்களுக்கு இந்த கூடுதல் டேட்டா பலன் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் கிரிக்கெட் தான் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தாலும், கால்பந்து, குறிப்பாக முக்கிய உலகளாவிய போட்டிகளின் போது, வலுவான மற்றும் வளர்ந்து வரும் பார்வையாளர்களை தொடர்ந்து கொண்டுள்ளது. கால்பந்து உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகள், சாதாரண பார்வையாளர்களையும் தீவிர ரசிகர்களையும் ஒன்றிணைத்து, டிஜிட்டல் தளங்களில் அதிக ஆர்வத்தை உருவாக்குகின்றன.
ரூ.798 பாஸ் மூலம், தொலைத்தொடர்பு மற்றும் ஓடிடி அடங்கிய ஒரு தொகுப்பின் வழியாக இந்த தேவையை வி நிறுவனம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. இந்த சலுகை, வி மூவீஸ் அன்ட் டிவி-ஐ அதன் வாடிக்கையாளர்களுக்கான ஒரு டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாக வலுப்படுத்தவும் உதவுகிறது.
ஏர்டெல் ரூ.99: இதேபோல ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா திட்டத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.99 கட்டணத்தில் 20 ஓடிடி தளங்களின் கன்டென்ட்களை அணுக முடியும்.
இந்த சிறப்பு விலை சலுகை ஜூன் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், பிரீமியம் ஓடிடி கன்டென்ட்களை எளிதாக அணுகும் வாய்ப்பை ஏர்டெல் இந்த சலுகையின் மூலம் வழங்குகிறது.
ரூ.99-க்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவின் கீழ்என்னென்ன கிடைக்கும்? ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் என்பது பல்வேறு ஓடிடி நிறுவனங்களின் கன்டென்ட்களை ஒரே ஆப்பிற்குள் ஒருங்கிணைக்கும் ஏர்டெல்லின் தளமாகும். தற்போதைய சிறப்பு சலுகையின் கீழ், தகுதியுள்ள பயனர்கள் மாதம் ரூ.99 கட்டணத்தில் இந்த சேவையை சப்ஸ்க்ரைப் சந்தா செய்து, 20 ஓடிடி தளங்களில் உள்ள பொழுதுபோக்கு கன்டென்ட்களை அணுகலாம்.


Click it and Unblock the Notifications