Home
News

அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் விஐ- இப்போ ரூ.128 விலையில் அட்டகாச சலுகை!

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.128 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் இரவு நேரத்தில் ஆன்-நெட் அழைப்பிற்கு 10 நிமிடங்களை வழங்குகின்றன. அனைத்து உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு இந்த திட்டம் விநாடிக்கு 2.5 பைசா வசூலிக்கிறது. இந்த திட்டம் இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரை மற்றும் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ஐஎஸ்டி அழைப்புகளுக்கு ரூ.1, ரூ.1.50 பைசா மற்றும் ரூ.5 என்ற வீதம் வசூலிக்கிறது. எஸ்எம்எஸ் திட்ட வவுச்சர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

திட்டங்கள் கிடைக்கும் வட்டம்

திட்டங்கள் கிடைக்கும் வட்டம்

தற்போதைய நிலவரப்படி மும்பை, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் (கிழக்கு), உத்தரபிரதேசம் (மேற்கு) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.128 ரீசார்ஜ் திட்டம்

ரூ.128 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ஒரு ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக் ரூ.128 அறிமுகப்படுத்திய சிறிது நேரத்திலேயே நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த திட்டம் அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளை வழங்காது இந்த திட்டம் தங்களது எண்ணை செயலில் வைத்திருக்க உதவுவதோடு உள்வரும் அழைப்புகளை பெற அனுமதிக்கிறது.

ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா தனது ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை புதுப்பித்துள்ளது. 1ஜிபி டேட்டா நன்மைகளை 24 நாட்களுக்கு பயனர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது. விஐ திரைப்படங்கள் மற்றும் டிவியின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. நிறுவனம் தற்போது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.447 விலையில் தொடங்கப்பட்ட திட்டம்

ரூ.447 விலையில் தொடங்கப்பட்ட திட்டம்

புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் ரூ.447 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 50 ஜிபி தரவு டேட்டா கிடைக்கிறது. அதோடு இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா பயனர்கள் தினசரி வரம்பு என்ற தடையின்றி பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் கூடுதலாக பயனர்கள் மொத்தம் 50 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்த திட்டங்கள் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டத்தில் விஐ மூவிஸ், டிவி கிளாசிக் அணுகலையும் வழங்குகிறது. இதன்மூலம் பயனர்கள் செய்திகள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரூ.699 விலையில் ரீசார்ஜ் திட்டம்

ரூ.699 விலையில் ரீசார்ஜ் திட்டம்

ரூ.699 திட்டத்தில் நிறுவனம் மாதத்திற்கு 100 மெசேஜ் உட்பட வரம்பற்ற அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், விஐ மூவிஸ் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. அதோடு ரெட் எக்ஸ் பயன்பாட்டு அணுகலும் கிடைக்கிறது இதன் விலை ரூ.1099 ஆக இருக்கிறது. இதோடு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஐ மூவிஸ் அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
VI Launched Rs.128 Prepaid Voucher Plan With 10 Minutes For ON-Net Calling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X