Home
News

ஐபிஎல் 2021 லைவ், குக் வித் கோமாளி இலவசமா பார்க்கனுமா?- தினசரி 3ஜிபி டேட்டாவுடன் விஐ புதிய நான்கு திட்டங்கள்!

ஜியோ மற்றும் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொடர்ந்து விஐ நிறுவனம் இலவசமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்களை வழங்கும் ப்ரீபெயட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விஐ நிறுவனம் இலவச ஜீ5 சந்தாவை மட்டும் வழங்கியது. ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டியை நேரலையாக பார்க்க டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை விஐ அறிமுகப்படுத்தியுள்ளது. விஐ அறிமுகம் செய்த புதிய திட்டங்கள் கவர்ச்சிகரமான நன்மைகளை வழங்குகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விஐ திட்டங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விஐ திட்டங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விஐ திட்டங்கள் ரூ.401 முதல் ரூ.801 வரை இருக்கிறது. இந்த திட்டங்களானது ரூ.401, ரூ.501, ரூ.601 மற்றும் ரூ.801 ஆகிய விலையில் கிடைக்கிறது. இந்த திட்டங்களுடன் ரூ.399 விலையில் கிடைக்கும் இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகலை, குரல் அழைப்பு, டேட்டா, எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வழங்குகிறது. காம்போ திட்டங்களான ரூ.401, ரூ.601 மற்றும் ரூ.801 திட்டங்களில் குரலழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்பட்டாலும் ரூ.501 ரீசார்ஜ் திட்டத்தில் தரவு நன்மை மட்டுமே கிடைக்கிறது.

விஐ ரூ.401 திட்டம்

விஐ ரூ.401 திட்டம்

விஐ ரூ.401 திட்டம் குறித்து பார்க்கையில் இது ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடனான மலிவு விலை திட்டமாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 3 ஜிபி டேட்டா, 16 ஜிபி கூடுதல் தரவு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் என 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் பயனர்கள் ஐபிஎல் போட்டி, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும் மல்டிபிளக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பதற்கான அணுகல் கிடைக்கும்.

விஐ ரூ.501 ரீசார்ஜ் திட்டம்

விஐ ரூ.501 ரீசார்ஜ் திட்டம்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் கிடைக்கும் இரண்டாது திட்டம் இதுவாகும். இந்த திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் முழுவதும் மொத்தம் 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தினசரி இணைய வரம்பு இல்லாமல் காம்போ திட்டத்தில் மொத்தமாக கிடைக்கிறது. தினசரி லிமிடெட் இணைய திட்டங்களை விரும்பாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் இணைய சேவை தவிற குரலழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் பயனர்கள் ஐபிஎல் போட்டி, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும் மல்டிபிளக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பதற்கான அணுகல் கிடைக்கும்.

விஐ ரூ.601 திட்டம்

விஐ ரூ.601 திட்டம்

விஐ ரூ.601 திட்டமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் கிடைக்கும் மூன்றாவது திட்டமாகும். இந்த திட்டமானது ரூ.401 போன்றே காம்போ திட்டமாகும். இந்த திட்டமானது தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 3 ஜிபி தரவுடன் கூடுதல் 16 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐ அறிமுகம் செய்த ரூ.801 ரீசார்ஜ் திட்டம்

விஐ அறிமுகம் செய்த ரூ.801 ரீசார்ஜ் திட்டம்

விஐ அறிமுகம் செய்த ரூ.801 ரீசார்ஜ் திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகலை வழங்கும் திட்டமாகும். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்கும் மிகப்பெரிய திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 16ஜிபி டேட்டாவ பெறுவார்கள். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவையை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
VI Launched New Prepaid Plans With Disney+ Hotstar Streaming Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X