ரூ.82 மட்டுமே: விஐ அறிமுகம் செய்த அட்டகாச ரீசார்ஜ் திட்டம்!

|

வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. விஐ நிறுவனமானது ரூ.82 கூடுதல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டமானது பயனர்களுக்கான புதிய ஆட் இன் திட்டமாக இருக்கிறது. இது பயனர்களுக்கு சோனிலைவ் ப்ரீமியம் சந்தாக்களை வழங்குகிறது.

போட்டிப் போடும் விதமாக பல்வேறு திட்டங்கள்

போட்டிப் போடும் விதமாக பல்வேறு திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருக்கிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் அதீத இணைய வேகத்தை பதிவு செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்திருக்கிறது. விஐ நிறுவனம் இந்த நிறுவனங்களோடு போட்டிப் போடும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. விஐ நிறுவனமானது ரூ.82 கூடுதல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டமானது பயனர்களுக்கான புதிய ஆட் இன் திட்டமாக இருக்கிறது. இது பயனர்களுக்கு சோனிலைவ் ப்ரீமியம் சந்தாக்களை வழங்குகிறது.

விஐ அறிவித்துள்ள புதிய ரூ.82 திட்டம்

விஐ அறிவித்துள்ள புதிய ரூ.82 திட்டம்

விஐ அறிவித்துள்ள புதிய ரூ.82 திட்டமானது 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 14 நாட்கள் ப்ரீபெய்ட் ஆட் ஆன் திட்டமாக வருகிறது. எனவே இந்த திட்டத்தில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 28 நாட்களுக்கான சோனி லைவ் ப்ரீமியம் சந்தா சலுகை இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. ரூ.82 திட்டமானது பயனர்களுக்கு வோடபோன் ஐடியா உள்ளடக்க லைப்ரேரி அணுகலை வழங்குகிறது. விஐ பயன்பாட்டில் விஐ மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை உள்ளடக்கியது. விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப்ஸ்-க்கான அணுகல் கிடைக்கிறது. இதன்மூலம் 450-க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்கள், நேரலை செய்தி சேனல்கள் மற்றும் பிற ஓடிடி பயன்பாடிகளின் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கிடைக்கும் சோனி லைவ் ப்ரீமியம் சந்தாவான மொபைலில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக விஐ ஏப்ரல் இறுதியில் ஐந்து திட்டங்களை அறிமுகம் செய்தது இதன் விவரங்களை பார்க்கலாம். இந்த ஐந்து புதிய திட்டங்களானது ரூ.29, ரூ.39, ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 என்ற விலையில் கிடைக்கிறது.

ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவான விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். இந்த திட்டம் உங்களுக்கு வெறும் ரூ. 29 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ரூ.29 ப்ரீபெய்ட் திட்டமானது, அதன் விலையில் கிடைக்கக்கூடிய ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். உங்கள் அடிப்படை திட்டத்தின் FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) தரவு தீர்ந்துவிட்டால் இந்த 4G டேட்டா வவுச்சரை நீங்கள் பயன்படுத்தலாம்.

திட்டத்தின் பயனர்கள் அழைப்பு நன்மை

திட்டத்தின் பயனர்கள் அழைப்பு நன்மை

இந்த ரூ.29 திட்டத்தில், பயனர்கள் 2ஜிபி FUP டேட்டாவை 2 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மட்டுமே பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனர்கள் அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை போன்ற மற்ற எந்த நன்மையையும் பெற மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்தபடியாக, வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 39 ப்ரீபெய்ட் திட்டம் பற்றிப் பார்க்கலாம். இந்த Vodafone Idea ரூ.39 திட்டம் 4G டேட்டா வவுச்சராக வருகிரியாது. இந்தத் திட்டத்தில், பயனர்கள் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் 3ஜிபி FUP டேட்டாவைப் பெறுகிறார்கள். இத்திட்டம் வேறு எந்த பலன்களையும் வழங்குவதில்லை.

21 நாட்கள் வேலிடிட்டி நன்மைகள்

21 நாட்கள் வேலிடிட்டி நன்மைகள்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 98 திட்டத்தின் விஷயங்கள் முந்தைய திட்டங்களை விட இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. Vi இந்த திட்டத்தை இரண்டு வெவ்வேறு வட்டங்களில் வெவ்வேறு வழிகளில் வழங்குகிறது. நிறுவனத்தின் தகவல் படி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா & கோவா வட்டங்களில் வழங்கப்படுவதை ஒப்பிட்டுப் பார்த்த போது, குஜராத்தில், ரூ.98 என்பது 21 நாட்களுக்கு 9ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இது அங்கு ஒரு 4ஜி டேட்டா வவுச்சராக செயல்படுகிறது. இந்த Vi ரூ.98 திட்டம் உண்மையிலேயே வரம்பற்ற குரல் அழைப்பு, 200MB டேட்டா மற்றும் 15 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. நிறுவனம் வழங்கும் வெளிச்செல்லும் SMS எதுவும் இதில் இல்லை. FUP தரவு பயன்படுத்தப்பட்ட பிறகு Vi ஆனது 50p/MB டேட்டாவை வசூலிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்

வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்

Vodafone Idea வழங்கும் ரூ. 195 திட்டம் என்பது நிறுவனம் சேர்த்த புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 2GB FUP டேட்டாவுடன் 300 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 31 நாட்களுக்குப் பெறுவார்கள். Vi Movies & TV Basic இன் கூடுதல் நன்மையும் இதில் உள்ளது. அடுத்தபடியாக நிறுவனம் வழங்கக்கூடிய, வோடபோன் ஐடியா ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம். Vodafone Idea அதன் ரூ.319 திட்டத்தை 31 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. Vi Hero அன்லிமிடெட் பலன்களும் உள்ளன, இவை Binge All Night, Data Rollover மற்றும் Data Delights சலுகைகளை அட்டவணைக்குக் கொண்டு வருகின்றன.

Best Mobiles in India

English summary
VI Launched its New Prepaid Plan at Rs.82 With SonyLiv Premium Subscription

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X