VI நிறுவனத்தின் ரூ.49-திட்டம் உட்பட மலிவு விலை திட்டங்கள் மற்றும் ஆப் வசதி அறிமுகம்.! முழுவிவரம்.!

|

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை செயல்அதிகாரி ரவீந்தர் தக்கர் மெய்நிகர்தளம் மூலம் வெளியிட்டார். அதில் வீ.,vi என்ற புதிய பிராண்ட்டை அறிவித்தார். இது we என்ற உச்சரிப்போடு அழைக்கப்படுகிறது.

துப்பிக்கப்பட்ட காலர் டியூன்ஆப்

இந்நிலையில் வோடபோன் ஐடியா அதன் மறுபெயரிடல் நடவடிக்கையை தொடர்ந்து வி காலெர்ட்யூன்ஸ் (Vi Callertunes) என்று அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட காலர் டியூன்ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப் ஸ்டோரில் வி ஆப்

மேலும் அப்பிள் ஆப் ஸ்டோரில் வி ஆப் வெளிவந்ததை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரிலும் வெளிவந்துள்ளது. பெயருக்கு தகுந்தபடி வி கால்ட்யூன்ஸ் ஆப் ஆனது வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்களுக்கு காலர் ட்யூன்களை அமைக்க அனுமதிக்கிறது.

விடாது துரத்தும் பப்ஜி: தாத்தாவின் பணம் 2 லட்சத்தை க்ளோஸ் செய்த சிறுவன்- மொத்த குடும்பம் ஷாக்!விடாது துரத்தும் பப்ஜி: தாத்தாவின் பணம் 2 லட்சத்தை க்ளோஸ் செய்த சிறுவன்- மொத்த குடும்பம் ஷாக்!

ஸ்க்ரீனில் வெறும் நான்கு

அதாவது ஹோம் ஸ்க்ரீனில் வெறும் நான்கு டேப்களுடன் இந்த ஆப் மிகவும் சுத்தமான இன்டர்பேஸை கொண்டுள்ளது, பின்பு வோடபோன் ஐடியாவிலிருந்து அணுக கிடைக்கும் காலர் டியூன் திட்டங்கள் ஆனது வெறும் 49 ரூபாயிலிருந்து தொடங்குகின்றனபின்பு இவை ரூ.249 வரை செல்கின்றன. இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 இந்த Vi Callertunes App வசதியை

முன்பு கூறியதுபடி இந்த Vi Callertunes App வசதியை பதிவிறக்கம் செய்து உள்நுழைந்ததும், ஹோம் ஸ்க்ரீனில் நான்கு விருப்பங்கள் இருக்கும், அது ஹோம், ஸ்டோர், ஆக்டிவிட்டி மற்றும் ப்ரொபைல்.

ஹோம் பிரிவில், டிரெண்டிங்,ப்ரொபைல்

குறிப்பாக ஹோம் பிரிவில், டிரெண்டிங்,ப்ரொபைல் ட்யூன்கள், நேம் ட்யூன்கள் மற்றும் பல போன்ற பல வசதிகள் உள்ளன. அடுத்து ஸ்டோர் பிரிவில் கலர் ட்யூன்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் இது யூவர் ட்யூன்ஸ் ஆப் தி டே போன்ற விருப்பங்களின் கீழ் உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் ட்யூன்களை அணுகலாம் என்பது குறப்பிடத்தகக்து.

எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

ஆக்டிவிட்டி பிரிவில் நீங்கள்

மூன்றாவதாக ஆக்டிவிட்டி பிரிவில் நீங்கள் தற்போது மற்றும் கடந்த காலங்களில் செட்ஸ் செய்த காலர் ட்யூன்களை பார்க்கமுடியும். கடைசியாக ப்ரொபைல் பிரிவில் காலர் ட்யூன் திட்டங்களுக்கான அணுகல் கிடைக்கும் மற்றும் நீங்கள் தேர்வு செய்த நான்கு விருப்பங்களும் உள்ளன, அதாவது புதிய vi காலெர்ட்யூன்ஸ் திட்டங்களான ரூ.49, ரூ.69, ரூ.99 மற்றும் ரூ.249 ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.

 நிறுவனத்தின் ரூ .49 காலர் டியூன்

அதன்படி vi நிறுவனத்தின் ரூ.49 காலர் டியூன் திட்டம் ஆனது 50காலர் ட்யூன்களை நான்கு வாரங்களுக்கும் (ப்ரீபெய்ட் பயனர்கள்) 30நாட்களுக்கும் (போஸ்ட்பெய்ட் பயனர்கள்) இலவசமாக வழங்குகிறது. பின்பு ரூ.69 திட்டமானது பயனர்களுக்கு வரம்பற்ற காலர் ட்யூன்களை மாற்ற அனுமதிக்கிறது, இதுவும் ரூ.49-திட்டம் போலவே செல்லுபடியாகும்.

திட்டம் ஆனது 100 காலர் ட்யூன்களை

அடுத்து ரூ.99 திட்டம் ஆனது 100 காலர் ட்யூன்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. கடைசியாக ரூ.249 வி காலெர்டூன் திட்டம் ஆனது பயனர்களை 250 காலர் ட்யூன்களை ஒரு வருடத்திற்கும் மேலாக கூடுதல் செலவின்றி மாற்ற அனமதி கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launches New Vi Callertunes App for Android & iOS Users, Plans Start at Rs 49: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X