ரூ.351-ரீசார்ஜ் திட்டத்தில் 100ஜிபி டேட்டா வழங்கிய Vi நிறுவனம்! வேலிடிட்டி?

|

சமீபத்தில் வி என்கிற புதிய பிராண்ட் ஆக உருமாறிய வோடபோன் ஐடியா நிறவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்நிறுவனம் தொடர்ந்து புதய திட்டங்களை அறிமுகம் செய்கிறது.

ஐடியா நிறுவனம் ரூ.351-க்கு தினசரி வரம்பில்லாத

அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.351-க்கு தினசரி வரம்பில்லாத ஒரு புதிய டேட்டா பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ஆனது 100ஜிபி அளவிலான டேட்டா 56 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வெறும் ரூ.351 க்கு வழங்குகிறது என்பது தான் சிறப்பு.

 டேட்டா கேப் வரும்பு இல்லாமல்

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.351-திட்டத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான தினசரி டேட்டா வரம்பும் கிடையாது. எனவே நீங்கள் விரும்பும் அளவிலான டேட்டாவை ஒவ்வொரு நாளும் டேட்டா கேப் வரும்பு இல்லாமல் பயன்படுத்தலாம்.

ஐடியாவின் இந்த புதிய திட்டம் ஆ

வோடபோன் ஐடியாவின் இந்த புதிய திட்டம் ஆனது மாணவர்கள்,வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், கிரிக்கெட் பிரியர்கள், மற்றும் கேமிங் ஆர்வலர்கள் ஆகியோர்களை குறிவைத்து தான் வெளிவந்துள்ளது. இதுதவிர்த்து GIGAnet என்கிற திட்டத்தையும் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்தது. இது நிகழ்நேரத்தில் பயனர்கள் எல்லா விஷயங்களுடனும் இணைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

கனவு இல்ல நிஜம்: ரூ.4000-த்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன்- அட்டகாச அம்சங்களோடு ஜியோ ஆர்பிக்!

.

1ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவை 7

தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் 1ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவை 7 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வோடபோன் ஆப் வழியாக இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை சரிபார்க்கலாம், பின்பு இதுகுறித்து ஒரு அறிவிப்பு விந்துவிட்டதா என உங்களது இன்பாக்ஸையும் சரிபார்க்கலாம்.

அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகமாகும் ஒப்போ ஏ93: சிறப்பம்சங்கள் இதோ!

திட்டங்களின் கீழ் இலவச ZEE5 பிரீமியம் சந்தாவையும் வ

முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் இலவச ZEE5 பிரீமியம் சந்தாவையும் வழங்கியது, அவற்றின் விலை ரூ.355, ரூ.405, ரூ.595,ரூ.795, ரூ.2,595-ஆகும்.

ZEE5 சேவையானது ஏர்டெல்

அதாவது சமீபத்தில் ZEE5 சேவையானது ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து பிரிந்துவிட்டதால் வோடபோன் ஐடியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை புதிய வாடிக்கைகையாளர்களை ஈர்க்கும் அல்லது ஏற்கனவே உள்ள தக்கவைக்கும் ஒரு நல்ல நடவடிக்கையாகும்

வோடபோன் ஐடியா ரூ.355 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.355 திட்டம்

அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.355 திட்டமானது 28நாட்களுக்கு 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் ரூ.999 மதிப்புள்ள ZEE5 பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.405-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.405-திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.405-திட்டம் ஆனது காம்போ திட்டமாகும். இந்த திட்டம் 90ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தா போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.595-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.595-திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.595-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும்.மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்திற்க்கான ZEE5 பிரீமியம் சந்தா

உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.795-திட்டம்- ரூ 2595 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.795-திட்டம்- ரூ 2595 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.795-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்திற்க்கான ZEE5 பிரீமியம் சந்தா உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். கடைசியாக ரூ 2595 திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள் ஆகும், இதில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்திற்க்கான ZEE5 பிரீமியம் சந்தா

உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vi Introduced Rs 351 Prepaid Plan 100GB Data And Other Benefits: Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X