Home
News

Vodafone Idea கொண்டுவந்த புது திட்டம்.! இது தெரிஞ்சா இனி ரீசார்ஜ் பண்ணாம விட மாட்டீங்க..

வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் போன்ற திட்டங்களை அறிமுகம் செய்த பின்பு மீண்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பட்ஜெட் விலை திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதாவது ரூ.839 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் எப்படி ரீசார்ஜ் செய்வது என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

Vodafone Idea கொண்டுவந்த புது திட்டம்.! என்னென்ன நன்மைகள்?

வோடபோன் ஐடியா தற்போது கொண்டுவந்துள்ள ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர சில அசத்தலான நன்மைகள் இந்த வோடபோன் ஐடியாவின் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி உள்ளது. மேலும் வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா, ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Vodafone Idea கொண்டுவந்த புது திட்டம்.! என்னென்ன நன்மைகள்?

அதேபோல் வோடபோன் ஐடியாவின் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ரூ.839 திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அதிக நன்மைகள் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்ய சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.17 திட்டம்: அதாவது இது வோடாபோன் ஐடியாவின் வவுச்சர் (Voucher) பட்டியல்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் விலை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையலாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vodafone Idea கொண்டுவந்த புது திட்டம்.! என்னென்ன நன்மைகள்?

அதேபோல் இந்த ரூ.17 திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே ஆகும். மேலும் அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 ரீசார்ஜ்ஜின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது என்பது தான் உண்மை. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது வரம்பற்ற டேட்டா தேவையைக் கொண்டவர்களுக்கான திட்டமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.57 திட்டம்: இது கூட ஒரு ப்ரீபெய்ட் வவுச்சர் (Prepaid Voucher) என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ரூ.17 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.57 திட்டம். ஆனால் இதன் வேலிடிட்டி 7 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகும். அதாவது இந்த பேக் மொத்தம் 168 மணி நேரம் செல்லுபடியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea has launched Rs.839 prepaid plan that offers Disney Plus Hotstar mobile subscription for 3 months : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X