5 சிம் கார்டுகளுக்கு ஒரே Vi ரீசார்ஜ்.. பேமிலி மொத்தத்துக்கும் வாய்ஸ் கால்கள்.. டேட்டா, எஸ்எம்எஸ்.. 8 சிம் வரை!
விஐ மேக்ஸ் ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்களில் (Vi Max Family Postpaid Plans) இனிமேல் 8 செகண்டரி மெம்பர்களை ஆட் செய்து கொள்ளலாம். ஆகவே, ஒரு பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாக 8 சிம் கார்டுகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மற்றும் எஸ்எம்எஸ்களை (SMS) பயன்படுத்தி கொள்ளலாம். மூன்று விஐ மேக்ஸ் ஃபேமிலி திட்டங்களில் இந்த சலுகை கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
விஐ மேக்ஸ் ஃபேமிலி ரூ 701 திட்ட விவரங்கள் (Vi Max Family Rs 701 Plan Details): இந்த போஸ்பெய்ட் திட்டத்தில் ஒரு பிரைமரி மற்றும் 1 செகண்டரி சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். இதுபோக கூடுதலாக 7 சிம் கார்டுகள் வரையில் ஆட் செய்து கொள்ளலாம். இப்படி ஆட் செய்யும்பட்சத்தில் ரூ.299 கூடுதலாக கட்டணம் இருக்கும். பிரைமரிக்கு சலுகைகள் எப்படி?

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு 70 ஜிபி லம்ப்-சம் டேட்டா மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை கிடைக்கும். இதற்கு 200 ஜிபிக்கான டேட்டா ரோலேவர் சலுகையும் (Data Rollover) சலுகையும் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
இதுபோக ஆப்ஷன் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கான விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா, 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா மற்றும் 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வருகிறது. மேலும், 365 நாட்களுக்கான சோனிலிவ் (SonyLIV) சந்தா வருகிறது. இதுபோக ஸ்விக்கி ஒன் (SwiggyOne) போன்ற சந்தாவும் இருக்கிறது.
இதில் ஏதாவது 2 ஆப்ஷன்களை போஸ்ட்பெஸ்ட் கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இதுவரையில் பார்த்த சலுகைகள் பிரைமரி சிம் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து செகண்டரி சிம் கார்டுக்கு 40 ஜிபி லம்ப்-சம் டேட்டா மற்றும் 200 ஜிபி ரோலோவர் டேட்டா கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ்களை பெறலாம்.
விஐ மேக்ஸ் ஃபேமிலி ரூ 1201 திட்ட விவரங்கள் (Vi Max Family Rs 1201 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு பிரைமரி சிம் கார்டு மற்றும் 3 செகண்டரி சிம் கார்டுக்கு சலுகைகள் கிடைக்கும். ஆகவே, ஒரே ரீசார்ஜ் மூலம் 4 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதுபோதாது என்றால், ரூ.299 செலுத்தி கூடுதலாக 5 சிம் கார்டுகளை ஆட் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் பிரைமரி சிம் கார்டுக்கு 140 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் 200 ரோலோவர் டேட்டா கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும், 3000 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. இதிலும் ஓடிடி சலுகைகள் இருக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த ஆப்ஷன்களில் தேர்ந்தெடுக்கலாம்.
செகண்டரி சிம் கார்டுகளை பொறுத்தவரையில், 40 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதற்கு அடுத்து வரும் விஐ மேக்ஸ் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிகபட்ச சலுகைகள் கிடைக்கிறது. ஏனென்றால், ஒரே ரீசார்ஜ் மூலம் 5 சிம் கார்டுகளுக்கு நேரடியாக சலுகைகள் கிடைக்கிறது.
விஐ மேக்ஸ் ஃபேமிலி ரூ 1401 திட்ட விவரங்கள் (Vi Max Family Rs 1401 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 பிரைமரி சிம் மற்றும் 4 செகண்டரி சிம் கார்டுகளில் சலுகைகள் கிடைக்கும். முந்தைய திட்டத்தில் பார்த்த அதே சலுகைகள் இதற்கும் பொருந்துகிறது. இதிலும் கூடுதலாக 4 சிம் கார்டுகளை ஆட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








