ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகளை வழங்கும் Vi திட்டங்கள் இது தான்.. Vi வழங்கும் அல்டிமேட் நன்மைகள்..

|

நாட்டில் இப்போது இணையத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து வளர்ந்து படி படியாக வளர்ந்து முன்னேறி வருகிறது. மக்கள் நல்ல இணைய இணைப்பை விரும்புவது மட்டுமல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அவர்களுக்குப் பயனளிக்கும் சலுகைகளையும் விரும்புகிறார்கள். நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகச் சலுகைகளுடன் கூடிய பல திட்டங்களை வழங்கி வருகின்றன.

ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகளை வழங்கும் ஒரே திட்டம்

ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகளை வழங்கும் ஒரே திட்டம்

இந்தியாவில் உள்ள சில பயனர்கள் தங்கள் மொபைல் சேவைகளுக்கு சந்தா செலுத்தும் போது ப்ரீபெய்ட் திட்டங்களுக்குச் செல்ல விரும்பினாலும், மறுபுறம் சிலர் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கே செல்வதை விரும்புகிறார்கள். இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய வீரர்களில் ஒருவரான வோடபோன் ஐடியா தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களையும், குடும்பங்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது. Vodafone Idea அல்லது Vi வழங்கும் குடும்பப் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து கூடுதல் நன்மைகள் பற்றிய விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Vi இலிருந்து கிடைக்கும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

Vi இலிருந்து கிடைக்கும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

Vi ஆனது மொத்தம் ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ. 699 விலையில் இரண்டு உறுப்பினர்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. முதன்மை இணைப்புகள் மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு 40 ஜிபி டேட்டா உடன் மொத்தம் 80 ஜிபி டேட்டாவை இந்தத் திட்டம் வழங்குகிறது. பயனர்கள் மாதம் 3000 எஸ்எம்எஸ் உடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் பெறுகிறார்கள். வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் குரல் அழைப்புகளுடன், இந்த திட்டத்துடன் வரும் கூடுதல் நன்மை Vi Movies மற்றும் TV -க்கான அணுகல் மட்டுமே.

பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

Vi வழங்கும் ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi வழங்கும் அடுத்த போஸ்ட்பெய்ட் திட்டம் என்று பார்க்கையில் இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ. 999 என்ற விலையில் வருகிறது. ரூ. 999 என்ற விலைக்கு, Vi ஆனது 3 குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்லுபடியாகும் இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் மாதம் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையுடன் மொத்தம் 220 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் முதன்மை இணைப்பு மொத்தம் 140 ஜிபி பெறுகிறது. மற்ற இரண்டு இரண்டாம் இணைப்புகள் 40 ஜிபி டேட்டாவைப் பெறுகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Amazon Prime மற்றும் Disney+ Hotstar நன்மை

Amazon Prime மற்றும் Disney+ Hotstar நன்மை

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு மாதத்திற்கு 3000 SMS உடன் வரம்பற்ற உள்ளூர், STD மற்றும் தேசிய ரோமிங் குரல் அழைப்புகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் உள்ள கூடுதல் நன்மைகள் பற்றிப் பார்க்கையில் இந்த திட்டம் ரூ. 1,499 மதிப்புள்ள ஒரு வருட Amazon Prime அணுகல் மற்றும் ஒரு வருடத்திற்கு OTT இயங்குதளமான Disney+ Hotstar மொபைலுக்கான சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் Vi Movies மற்றும் TVக்கான அணுகலையும் பயனர்கள் பெறுகின்றனர்.

BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

Vi வழங்கும் ரூ. 1,299 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ. 1,299 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அடுத்து வரும் திட்டம் ரூ. 1,299 விலையில் வருகிறது. இது மொத்தம் ஐந்து இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா 300 ஜிபி ஆகும். இதில், முதன்மை இணைப்புக்கு 140 ஜிபி மற்றும் ஒவ்வொரு இரண்டாம் நிலை இணைப்புகளுக்கும் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் 3000 எஸ்எம்எஸ்/மாதம் உடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் குரல் அழைப்புகளுடன் 200 ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்திற்கான கூடுதல் பலன்கள் பற்றி பார்க்கையில், ரூ.999 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பலன்களைப் போலவே இருக்கும்.

Vi வழங்கும் ரூ. 1,699 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ. 1,699 போஸ்ட்பெய்ட் திட்டம்

பட்டியலில் உள்ள கடைசி இரண்டு திட்டங்கள் Vi வழங்கும் RedX குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆகும். ரூ.1,699 விலையில், ஒரு மாத Vi ஆனது வரம்பற்ற டேட்டாவுடன் வரும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 3 குடும்ப உறுப்பினர்களுக்கான இணைப்பை வழங்குகிறது மற்றும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகள் வரம்பற்ற டேட்டா மற்றும் குரல் அழைப்புகளுடன் 3000 எஸ்எம்எஸ் / மாதம் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. Vi இன் மற்ற RedX திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ. 2,299 என்ற விலையில் வருகிறது. இது 5 உறுப்பினர்களுக்கு இணைப்பை வழங்குகிறது.

உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..

Vi வழங்கும் ரூ. 2,299 போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ. 2,299 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 3000 SMS/மாதம் ஆகியவற்றுடன் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் நன்மைகள் கருதப்படும் வரையில், RedX திட்டங்கள் இரண்டும் பல OTT சந்தாக்கள் மற்றும் பலவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் டிவி மற்றும் மொபைலில் நெட்ஃபிக்ஸ்க்கான ஒரு வருட கால சந்தாவை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பெறலாம். இந்தத் திட்டங்கள் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் ரூ. 1,499 மதிப்பிலான சந்தா மற்றும் ரூ. 499 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகின்றன.

இப்படிப்பட்ட சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பானதா?

இப்படிப்பட்ட சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பானதா?

இது தவிர, ரெட்எக்ஸ் திட்டங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகலையும் கூடுதலாக வழங்குகின்றன. இந்த அணுகல் ஒரு சர்வதேச பயணத்தை உள்ளடக்கிய ஒரு வருடத்திற்கு நான்கு முறை கிடைக்கும். பயனர்கள் ரூ.2,999 மதிப்புள்ள 7 நாள் சர்வதேச ரோமிங் பேக்கைப் பெறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள பலருக்கும் தேவைப்படும் தனித்தனி திட்டங்களைத் தேர்வு செய்வதற்கு பதிலாக, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் இது போன்ற ஒற்றை சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பானது தானே. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vi Family Postpaid Plan Offers And Other Benefit Details That You Should Know Before Recharging : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X