டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!

|

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது இந்த

வி நிறுவனம்.

 டேட்டா ரோல்ஓவர் சலுகை

இந்த நிலையில் டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிப்பட்டு இருப்பதை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில்

அப்டேட் செய்து இருக்கிறது. மேலும் இதைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 முன்னதாக இது ஜனவரி 17 வரை அணுக கிடைக்கு

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், வி நிறுவனம் அதன் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக இது ஜனவரி 17 வரை அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.

இறுதிக்கு நகர்த்த அ

அதாவது வி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டேட்டா ரோல்ஓவர் வசதியை தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. இது தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதிக்கு நகர்த்த அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.

VI இணையதளத்தில்

மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரின் புதுப்பிக்கப்பட்ட கால அளவை அதிகாரப்பூர்வ VI இணையதளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பிரிவில் காணமுடியும். அதன்படி இந்த விளம்பர சலுகை அக்டோபர் 19, 2020 முதல் ஏப்ரல் 17, 2021 வரை பொருந்தும் என வி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்

அதேபோல் இந்த வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி ஆனது ரூ.249, ரூ.299, ரூ.399, ரூ.449, ரூ.595, ரூ.599, ரூ.699, ரூ.795, மற்றும் ரூ.2,595 திட்டங்களில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஓவர் வசதி வாரஇறுதி

மேலும் இந்த டேட்டா ரோல்ஓவர் வசதி வாரஇறுதி நாட்களில் பயன்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகை பலன்களில் மாற்றம், திரும்ப பெறுவது போன்றவற்றை டிராய் விதிமுறைகளுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளப்படலாம் என வி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VI extends weekend data rollover offer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X