வோடபோன் ஐடியா வழங்கும் Double Data ஆபர்: எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?
VI எனப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்தது. ஜியோ நிறுவனத்தை விட ஒரு சில திட்டங்களில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.

அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் சில திட்டங்களில் டபுள் டேட்டா எனப்படும் சலுகையை வழங்கி வருகிறது. அதாவது இந்தசலுகை என்னவென்றால், குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும் பொதுவான நன்மையானது இரட்டிப்பாகும்.

உதாரணமாக, வாடிக்கையாளர்கள் 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தால், அந்த திட்டம் டபுள் டேட்டா நன்மையின் கீழ் இருந்தால், அசல் 2ஜிபி தினசரி டேட்டா நன்மைக்கு பதிலாக 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையை வழங்கும். அதன்படி இப்போது டபுள் டேட்டா நன்மையை தரும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அசத்தலான திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டபுள் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் முதலில் 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்கியது. ஆனால் இப்போது டபுள் டேட்டா நன்மையின் காரணமாக, இது பயனர்களுக்கு 4 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்குகிறது. எனவே பயனர்கள் இந்த திட்டததில் மொத்தமாக 112ஜிபி அளவிலான டேட்டாவை பெறமுடியும்.
அதன்பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமும் டபுள் டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும், டபுள் டேட்டா சலுகையின் காரணமாக அசல் 2 ஜிபிக்கு பதிலாக இது 4 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்படத்தக்கது. எனவே இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தமாக 224ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், Vi Movies & TV அணுகல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டபுள் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதன்படி டபுள் டேட்டா' நன்மையுடன் கிடைக்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்கள் 2 ஜிபிக்கு பதிலாக 4 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. எனவே வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 336ஜிபி அளவிலான டேட்டாவை பெறமுடியும்.
அதன்பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், வி மூவிஸ் & டிவி' அணுகல் போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

வோடபோன் ஐடியா பயனர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்கள் அனைத்தும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகையுடன் வருகின்றன. அதேபோல் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையானது ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.
News Source: telecomtalk


Click it and Unblock the Notifications