தடுப்பூசி போடும் இடம் தெரியவில்லையா?- வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த அட்டகாச வசதி!

|

கோவிட்-19 தடுப்பூசி பங்கு நாட்டில் பெரும் பங்காற்று வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பலர் அனுபவிக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தடுப்பூசி ஸ்லாட் பதிவு செய்ய முடியாததாக இருக்கிறது. இதற்கு அரசு உட்பட பலர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கோவின் பயன்பாட்டின் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது. கோவினில் ஸ்லாட் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு உதவும் பல பயன்பாடுகள் உள்ளன. இதன் ஒருபகுதியாக வோடபோன் ஐடியாவும் இத்தகைய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. விஐ பயன்பாட்டின் மூலம் ஸ்லாட் இருக்கிறதா என்பதை அறிய முடியும்.

கோவிட் தடுப்பூசி ஸ்லாட்

கோவிட் தடுப்பூசி ஸ்லாட்

கோவிட் தடுப்பூசி ஸ்லாட் விழிப்பூட்டல்கள் மற்றும் விவரங்களை கோவின் ஆப், ஹெல்த் செட் ஆப் மூலம் மட்டுமே சரிபார்க்க் கடினமாக உள்ளது என்றே கூறலாம். இதை எளிமையாக்க விஐ பயனர்கள் தங்கள் தொலைபேசியில் விஐ பயன்பாட்டின் மூலம் தடுப்பூசி ஸ்லாட்டை காணலாம். விஐ பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இதன்மூலம் நீங்கள் ஸ்லாட்டை எளிதாக காணலாம்.

இடங்களை கண்டறிய உதவும்

இடங்களை கண்டறிய உதவும்

விஐ அதன் பயனர்களுக்கு, விஐ பயன்பாட்டின் மூலமாகவே கோவின் பயன்பாட்டில் இடங்களை கண்டறிய உதவும் ஸ்லாட் கண்டுபிடிப்புக்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விஐ பயன்பாட்டிலேயே அறிவிப்பு எச்சரிக்கைகளை இயக்கலாம். கோவிட்-19 தடுப்பூசி சந்திப்பை திட்டமிட மட்டுமே விஐ பயன்பாட்டை அணுக முடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

விஐ பயன்பாட்டில் கண்டுபிடிப்பது எப்படி

விஐ பயன்பாட்டில் கண்டுபிடிப்பது எப்படி

கோவிட்-19 தடுப்பூசி ஸ்லாட் விஐ பயன்பாட்டில் எவ்வாறு கண்டுபிடிப்பது என்று குறித்து பார்க்கையில், பயனர்கள் தங்களின் தேடல் வயது, தடுப்பூசி பெயர் (கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்பூட்னிக் வி), டோஸ், பணம் அல்லது இலவசம் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இதன்மூலம் பயனர்கள் தங்களது அருகில் உள்ள தடுப்பூசி கிடைக்கும் இடத்தை கண்டறியலாம். விஐ பயன்பாட்டின் மூலம் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி இடங்கள் மற்றும் எப்போது கிடைக்கும் என்பதை தெரிவிக்கும். இந்த சேவையானது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

விஐ பயன்பாட்டின் மூலம் தடுப்பூசி ஸ்லாட்டை எவ்வாறு கண்டறிவது

விஐ பயன்பாட்டின் மூலம் தடுப்பூசி ஸ்லாட்டை எவ்வாறு கண்டறிவது

ஆப் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி பயன்பாட்டில் உள்நுழையலாம். முகப்பு திரையில் இன்று தடுப்பூசி போடு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். தடுப்பூசி இடங்களை தேடவும் என்ற அறிவிப்பு எச்சரிக்கையை இயக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தங்களை கோவின் போர்ட்டலுக்கு வழிநடத்தி தடுப்பூசி பதிவு செய்ய அனுமதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதி

நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். கோவின் இயங்கதளமானது கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதிக்கிறது. மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VI Customers Now Known Covid-19 Vaccine Booking Slots: Here the Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X