Home
News

VI அதிரடி அறிவிப்பு: இந்த குறைந்த விலை திட்டத்தில் கூடுதலாக ரூ.50 தள்ளுபடி!

விஐ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது ரூ.50 தள்ளுபடியை பெறலாம். இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

விஐ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ நிறுவனம் தங்களது பயனர்களை ஈர்க்க தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. விஐ நிறுவனம் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ரூ.50 தள்ளுபடியை அறிவித்துள்ளது. நிறுவனம் அறிவித்துள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.249 ஆகும்.

தினசரி 1.5 ஜிபி தரவு, வரம்பற்ற குரலழைப்பு

தினசரி 1.5 ஜிபி தரவு, வரம்பற்ற குரலழைப்பு

விஐ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5 ஜிபி தரவு ஆகியவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் வாரஇறுதி ரோல்ஓவர் நன்மைகளையும் வழங்குகிறது. வாரஇறுதி ரோல்ஓவர் நன்மையின் மூலம் பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதி நாட்களில் முழுமையாக பயன்படுத்தலாம்.

யாருக்கெல்லாம் இந்த சலுகை

யாருக்கெல்லாம் இந்த சலுகை

விஐ பயன்பாட்டை பயன்படுத்தி திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கூடுதலாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக விஐ வலைதளம் தெரிவித்துள்ளது. அதேபோல் அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது 90 நாட்களுக்கு மேல் வரம்பற்ற திட்டத்தை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

வலைதளத்தில் ரீசார்ஜ் செய்யும்போது சலுகை

வலைதளத்தில் ரீசார்ஜ் செய்யும்போது சலுகை

MyVi.in வலைதளத்தில் For You அல்லது Recommended பிரிவின் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது இந்த சலுகை கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் விஐ பயன்பாட்டிலும் இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை அதிகரிக்க சலுகைகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதில் விஐ நிறுவனம் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், டபுள் டேட்டா ஆகிய பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இரட்டை தரவு நன்மை

இரட்டை தரவு நன்மை

விஐ நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் அதிக 4ஜி தரவு நன்மைகளை வழங்குகிறது. அதாவது 2ஜிபி தரவு வழங்கும் திட்டத்தில் இரட்டை தரவு சலுகைகளை வழங்குகிறது. அதாவது 2ஜிபி திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அதை டபுள் செய்து 4ஜிபி டேட்டாவாக வழங்குகிறது.

விஐ மூவிஸ் மற்றும் டிவி

விஐ மூவிஸ் மற்றும் டிவி

விஐ நிறுவனத்தின் டிஜிட்டல் இயங்குதளமான விஐ மூவிஸ் மற்றும் டிவியில் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்குவதற்கு வியாகாம்18-க்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் சேவையான வோட்செலக்ட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
VI Customers Can Get Rs.50 Discount on its Rs.249 Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X